மேலும் அறிய

கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கன மழைக்கு வாய்ப்புள்ளதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்க கடலில் இலங்கை கடலோர பகுதியில் நிலவுகிறது. இது வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 4 நாட்கள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து, நவம்பர் 11 ஆம் தேதியான இன்று பல மாவட்டங்களுக்கு ரெட், மஞ்சள் அலெர்ட்டுகளும் விடுக்கப்பட்டது. 

கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணி முதல் கன மழை பெய்து வருவதால் சேலம் மாவட்டத்தில் உள்ளது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். மேலும் கன மழைக்கு வாய்ப்புள்ளதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். சேலம் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 4 மணி நேரத்தில் அதிகபட்சமாக தலைவாசலில் 13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக காரிய கோவில் பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டம் ஆத்தூர், ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வந்தது. இருப்பினும் சேலம் மாநகர் பகுதியில் மழை பெய்யவில்லை. நேற்று காலை முதல் சேலம் மாநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சேலம் மாநகர பகுதிகளான அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், நான்கு ரோடு, 5 ரோடு, கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

இதேபோன்று தமிழகத்தில் கன மழை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், திருச்சி, தர்மபுரி, கரூர், தேனி உட்பட 23 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (11.11.2022) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
"சிக்கன் சாப்பிடல" பிரச்னையை கிளப்பிய பாஜக.. பேக் அடித்த முதல்வர்!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்பிஐ!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா EVKS  Elangovan: ஜெ. கலைஞரை அலறவிட்டவர் சிவாஜியின் சிஷ்யன்..! யார் இந்த EVKS இளங்கோவன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
"சிக்கன் சாப்பிடல" பிரச்னையை கிளப்பிய பாஜக.. பேக் அடித்த முதல்வர்!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்பிஐ!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
Free Coaching: இனி அரசுப்பணி ஈஸிதான்; போட்டித்தேர்வு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்- பங்கேற்பது எப்படி?
Free Coaching: இனி அரசுப்பணி ஈஸிதான்; போட்டித்தேர்வு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்- பங்கேற்பது எப்படி?
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
கைதின் பின்னணியில் அல்லு அர்ஜூனின் அரசியல் ஆசையா? அறிக்கை வந்ததும் ஆர்டர் போட்ட ரேவந்த் ரெட்டி?
கைதின் பின்னணியில் அல்லு அர்ஜூனின் அரசியல் ஆசையா? அறிக்கை வந்ததும் ஆர்டர் போட்ட ரேவந்த் ரெட்டி?
Embed widget