School Leave: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை...காரணம் என்ன?
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
School Leave: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என்று முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
2 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை
குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு - மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. இதனால் வேலை நாட்களை ஈடு செய்ய, கனமழையால் விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் சனிக்கிழமை வேலை நாளாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதனால், நாளை சனிக்கிழமை செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பள்ளிகள் இயக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தாலும், ஏற்கனவே விடுமுறை அட்டவணைப்படியே, நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என்றும் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
வானிலை நிலவரம்:
24.11.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25.11.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26.11.2023 முதல் 30.11.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்க கடல் பகுதிகள்:
27.11.2023: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
28.11.2023: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 28-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.