மேலும் அறிய

’சசிகலா – ஒபிஎஸ் சந்திப்பு’ தனிமைப்படுத்தப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?

அரசியல்வாதி இமைகளை எத்தனை முறை மூடித் திறக்கிறார் என்பது கூட அரசியல்தான். அதுவும், ஒபிஎஸ்-சின் ஒவ்வொரு அசைவிலும் அரசியல் கலந்தே இருக்கும் என்பது வரலாறு..!

’நதியினில் வெள்ளம், கரையில் நெருப்பு, இரண்டிற்கும் நடுவே இறைவனின் சிரிப்பு’ இது தான் எனது நிலை -  மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு ஒபிஎஸ் பேசிய வார்த்தைகள் இவை.’சசிகலா – ஒபிஎஸ் சந்திப்பு’ தனிமைப்படுத்தப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?

அதிமுக என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன் ; ஆனால், என்னால் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியவில்லை என்ற தனது நிலையை சட்டப்பேரவையிலேயே போட்டு உடைத்திருக்கிறார் அவர். அதிமுக-வின் தனிப்பெரும் தலைவராக, தான் இருக்க வேண்டும் அல்லது அதிமுகவில் மீண்டும் ஒற்றைத் தலைமை ஏற்பட வேண்டும் என்ற தலையாய பணியை அவர் தொடங்கிவிட்டதற்கான சமிக்கை இது.’சசிகலா – ஒபிஎஸ் சந்திப்பு’ தனிமைப்படுத்தப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?

தனக்கு தேவை என்றால் தர்மயுத்தம் செய்வதும், தேவையில்லையென்றால் யுத்த தளவாடங்களையெல்லாம் பரண்மீது தூக்கி அடுக்கி வைப்பதும் அவருக்கு கைவந்த கலை. அதனால்தான், இப்போது தர்மயுத்தத்திற்கு பதில் அவர் ’மவுன யுத்தம்’ செய்யத் தொடங்கியிருக்கிறார்.

எகிறும் ஈபிஎஸ் – புகழும் ஒபிஎஸ்

கோடநாடு கொலை வழக்கில் தன்னை சிக்க வைக்க திமுக அரசு முயற்சி செய்கிறது, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு போட்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக இறங்கியிருக்கிறது என்றெல்லாம் ஏகத்திற்கு அரசு மீது எடப்பாடி பழனிசாமி எகிறிக்கொண்டிருக்கும்போது, ஒபிஎஸ் மட்டும் திமுக-வினரோடு சத்தமில்லாமல் நட்பு பாராட்டிக்கொண்டிருக்கிறார்.

கலைஞர் கருணாநிதிக்கு மணிமண்டபம் அமைக்கும் அறிவிப்பை வரவேற்று, இது வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு என்று சொல்லி, தனது தந்தையே கலைஞரின் தீவிர பக்தர் என புகழ்ந்த ஒபிஎஸ்-சை பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் பேரவையில் திருதிருவென விழித்தார் எடப்பாடி பழனிசாமி.’சசிகலா – ஒபிஎஸ் சந்திப்பு’ தனிமைப்படுத்தப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?

கண்டனமாவது – கருப்பு பேட்ஜாவது

கோடநாடு வழக்கின் மறு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எல்லா எம்.எல்.ஏக்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து தரையில் அமர்ந்து தர்ணா செய்தபோது, தனது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணியாமல், முகத்தில் பெரிய அளவிலான சலனமும் காட்டாமல் சன்னமாக அமர்ந்திருந்தார் ஒபிஎஸ். கருப்பு பேட்ஜ் அணியாதது எல்லாம் ஒரு விஷயமா ? என்று கேட்கலாம். ஆமாம், அப்படிதான் எடுத்துக்கொள்ளவேண்டும். அரசியல்வாதி இமைகளை எத்தனை முறை மூடித் திறக்கிறார் என்பது கூட அரசியல்தான். அதுவும் ஒபிஎஸ்-சின் ஒவ்வொரு அசைவிலும் அரசியல் கலந்தே இருக்கும் என்பது வரலாறு.’சசிகலா – ஒபிஎஸ் சந்திப்பு’ தனிமைப்படுத்தப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?

அடுத்த யுத்தத்தை தொடங்கும் ஒபிஎஸ்

அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிதான் தற்போதைக்கு சர்வ வல்லமை படைத்த தலைவர் என  எல்லோருக்கும் தெரிந்திருக்கும் நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் தனக்கு உரிய முக்கியத்துவமும், முடிவு எடுக்கும் அதிகாரமும் இல்லை என்பதை உணர்ந்துள்ள ஒபிஎஸ், தன்னுடைய அடுத்தக்கட்ட ’யுத்தத்தை’ தொடங்க முடிவு செய்திருக்கிறார்.  கோடநாடு கொலை வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு பாதகமாக அமைந்தால், அது தனக்கு சாதகமாக இருக்கும் என கணக்குப்போடும் அவர், அது நடக்கவில்லையெனில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளுக்கு இப்போதே அச்சாரம் போடத் துவங்கியிருக்கிறார்.

ஆறுதல் சொன்ன ஸ்டாலின் ; அசந்துபோன எடப்பாடி

 கடந்த 1ஆம் தேதி ஒபிஎஸ் மனைவி விஜயலெட்சுமி காலமான நிலையில், சட்டப்பேரவைக்கு போகும் முன் பெருங்குடியில் உள்ள மருத்துவமனைக்கு அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு சகிதமாக நேரடியாக சென்று ஒபிஎஸ்க்கு ஆறுதல் சொன்னார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் கைகளை பற்றி அமரச் செய்து ஆறுதல் சொன்ன ஸ்டாலினின் நடவடிக்கையை பார்த்து அருகே நின்ற எடப்பாடி பழனிசாமி சற்று அசந்துதான் போனார். இதனை அரசியல் நாகரிகம் என்று பார்த்தாலும் கூட, ஒபிஎஸ் மீது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனி கரிசனம் இருக்கிறது என்பது உன்னித்துப்பார்த்தால் தெரியும். பன்னீசெல்வமும் அதற்கு ஏற்றவாறே நடந்துகொள்கிறார்.’சசிகலா – ஒபிஎஸ் சந்திப்பு’ தனிமைப்படுத்தப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?

எடப்பாடி மீது கோபம் ஏன் ?

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தபோது, மெரினாவில் அவரது உடலை அடக்கம் செய்ய இடம் கொடுக்க நேரிலும், தொலைபேசியிலும் பல முறை கேட்டும், அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அனுமதி தரவில்லை. இதனை மு.க.ஸ்டாலினால் அவ்வளவு எளிதில் மறந்துவிடவும் முடியாது ; மன்னித்துவிடவும் முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த கோவம்தான் இப்போது எடப்பாடி பழனிசாமி மீது அனலடித்துக்கொண்டிருக்கிறது’சசிகலா – ஒபிஎஸ் சந்திப்பு’ தனிமைப்படுத்தப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?

பிரிவை இணைத்த மறைவு

ஒபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று ஆறுதல் சொல்லிச் சென்ற அடுத்த சில நிமிடங்களிலேயே யாரும் எதிர்பார்க்காத நிலையில், மருத்துவமனைக்கு வந்தார் சசிகலா. கிட்டத்தட்ட நான்கரை வருடத்திற்கு பிறகு ஒபிஎஸ்-சை நேரடியாக சந்தித்தார்.  ஒபிஎஸ் கைகளை பற்றி அவர் ஆறுதல் சொன்னபோது இருவரும் பரஸ்பரம் கண்கலங்கி கண்ணீர் வடித்தனர். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஒபிஎஸ் அருகிலேயே அமர்ந்து ஆறுதல் சொன்னார் சசிகலா.’சசிகலா – ஒபிஎஸ் சந்திப்பு’ தனிமைப்படுத்தப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையின்போது ஒபிஎஸ் அருகே இருந்த எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கர், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சசிகலா வந்தபோது அங்கிருந்து கிளம்பிவிட்டனர். ஆர்.பி.உதயகுமார் மட்டும் மாஸ்க் சகிதமாக இருந்தாலும், அவர் கண்ணில் ஒரு கலவரம் இருந்தது.’சசிகலா – ஒபிஎஸ் சந்திப்பு’ தனிமைப்படுத்தப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?

தேனி சென்ற டிடிவி தினகரன்

சென்னையில் மருத்துவமனைக்கு சென்று ஒபிஎஸ்-சை சந்தித்து ஆறுதல் கூறிய சசிகலாவை தொடர்ந்து, பெரியகுளத்தில் உள்ள ஒபிஎஸ் வீட்டிற்கே நேரடியாக சென்றார் டிடிவி தினகரன். தினகரனை பார்த்த ஒபிஎஸ் கைகளை கூப்பி கண்ணீர் வடித்தார். பின்னர் விஜயலெட்சுமி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர், ஒபிஎஸ்-சுடன் அமர்ந்து அவருக்கு ஆறுதல் சொன்னார்.

’சசிகலா – ஒபிஎஸ் சந்திப்பு’ தனிமைப்படுத்தப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?

சசிகலா, தினகரன் இருவரும் நேரடியாக சென்று ஒபிஎஸ்-சை சந்தித்து ஆறுதல் கூறியதை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ந்து போனது.

மீண்டும் அதிமுகவில் சசிகலா ?

நான்கு வருட பிரிவை தனது மனைவி மறைந்து, இணைத்திருக்கிறார் என ஒபிஎஸ் தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் பகிர்ந்துக்கொண்டு நெகிழ்ந்திருக்கிறார். இனியும்  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பை மட்டுமே வைத்துக்கொண்டு, எந்த அதிகாரமும் இல்லாமல் இருக்க அவர் விரும்பவில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.’சசிகலா – ஒபிஎஸ் சந்திப்பு’ தனிமைப்படுத்தப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?

எனவே, மீண்டும் சசிகலாவை அதிமுகவிற்குள் கொண்டுவந்து ஒன்றை தலைமையை உருவாக்கும் முயற்சியை அவரே முன்வந்து எடுக்க தயாராகிவிட்டார் என்றும், எடப்பாடி பழனிசாமியையும் அவருக்கு ஆதரவாக இருந்து தன்னை கட்சியில் தனிமைப்படுத்த நினைத்தவர்களையும், தனிமைப்படுத்தும் ஒரே ஆயுதம் சசிகலா மட்டும்தான் என ஒபிஎஸ் உணர்ந்துவிட்டார் என்றும் தேனி வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

விரைவில் அதிமுகவில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறும் என எதிர்பார்க்கலாம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Embed widget