மேலும் அறிய

கள்ளக்குறிச்சி பெருமாள் கோயிலில் போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் சாமி தரிசனம்

கள்ளக்குறிச்சி 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலில் போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் சாமி தரிசனம்

கள்ளக்குறிச்சி அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலில் இதுநாள் வரையில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் உள்ளே நுழைய முடியாத சூழலில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர், கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே எடுத்த வாய்நத்தம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் இல்லாமல் பிற மேல் சாதி சமூக மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த கோயிலில் இதுநாள் வரையில் ஆதிதிராவிடர் மக்கள் உள்ளே நுழைந்து சாமி கும்பிட வில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்த கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட வேண்டும் என்ற ஆவல் ஆதிதிராவிட மக்களுக்கு இருந்து வந்த நிலையில் இது நீண்ட காலமாகவே தடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இந்த கோயிலுக்குள் நுழைந்த சாமி கும்பிட வேண்டும் என ஆதிதிராவிட சமூக மக்கள் முடிவெடுத்து கடந்த ஆறு மாத காலமாக போராடி வந்துள்ளனர். இதற்காக சமீபத்தில், இதனால் எழுந்த பிரச்சனையின் காரணமாக சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்திலும் சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட மக்கள் கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற்று வந்துள்ளனர்.
 
அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட மக்கள் இந்த வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ளே நுழைந்து சாமி கும்பிடுவதற்கு இன்று ஜனவரி 2ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 300 போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.  கள்ளக்குறிச்சி எஸ் பி ஆக இருந்து தற்போது டிஐஜி யாக பதிவி உயர்வு பெற்றுள்ள பகலவன், விழுப்புரம் எஸ்பி ஸ்ரீ நாதா ஆகியோரது தலைமையில் ஏ டி எஸ் பி க்கள், டிஎஸ்பிக்கள் காவல் நிலைய ஆய்வாளர்கள் அதிரடி படையினர் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 
போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே ஆதிதிராவிடர் சமூக மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பகுதியில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பூஜை சாமான்களுடன் ஊர்வலமாக வந்து வரதராஜா பெருமாள் கோவிலுக்கு உள்ளே கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் உள்ளே நுழைந்து சாமி கும்பிட ஆரம்பித்தனர். கோவிலுக்குள் இதுவரை வராத ஆதி திராவிட சமூக மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் கோவிலுக்குள் நுழைந்து பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். அப்போது ஆதிதிராவிட சமூக மக்கள் அனைவரும் பரவசமாக காணப்பட்டனர். ஆதிதிராவிடர் சமூக மக்கள் சாமி கும்பிடுவதற்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு அளித்த வருகின்றனர்.

என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget