மேலும் அறிய

MR Vijayabhaskar Arrest: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது - சிபிசிஐடி அதிரடி

MR Vijayabhaskar Arrest:  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை, 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி கைது செய்துள்ளனர்.

MR Vijayabhaskar Arrest:  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை, 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி கைது செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது:

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில், கேரளாவில் வைத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் இரண்டு முறை அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து 5 தனிப்படை அமைத்து சிபிசிஐடி போலீசார் அவரை தேடி வந்த நிலையில், விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர் பிரவீன் ஆகியோரை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்த காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, போலி ஆவணங்கள் தயார்த்து சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்ததாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் என்பவர் உட்பட 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விவரம் என்ன?

கரூர்- மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் டவுன் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு தொடர்பாக புகாரளித்தார். அதில்,” வெள்ளியணையை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகள் ஷோபனா, உடன் 4 பேரை அழைத்துக்கொண்டு செட்டில்மென்ட் மூலம் தமது சொத்தை கிரையம் செய்ய சார்பதிவாளர் அலுவலகம் வந்திருந்தார். ஆனால் சொத்து வெள்ளியணை சார்பதிவகத்துக்குட்பட்டது. அதோடு உண்மையான ஆவணத்தையும் அவர்கள் கொண்டுவரவில்லை. இதனால் பத்திரப் பதிவு செய்யாமல் நிலுவையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, உண்மையான ஆவணங்கள் தொலைந்து போய்விட்டதாகவும், அதுதொடர்பாக வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சி.எஸ்.ஆர். பெற்றுள்ளதாக கூறி அதன் நகலை ஆவணதாரர் சார்பில் 2 பேர் வழங்கினர். மேலும் வெள்ளியணை சார்பதிவகத்தில் இருந்து மதிப்பறிக்கை, வில்லிவாக்கம் காவல்நிலைய ஆய்வாளார் வழங்கியதாக  'நான்டிரேசபிள்' (ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை) சான்றிதழை சமர்பித்தனர். அவற்றின் அடிப்படையில் கடந்த மாதம் 10ம் தேதி நிலுவையில் இருந்து ஆவணம் விடுவிக்கப்பட்டு, ரூ.100 கோடி மதிப்பிலான அந்த 22 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டது.  ஆனால் ஷோபனாவின் தந்தை பிரகாஷோ, போலி சான்றிதழ்கள் கொடுத்து மோசடியாக பத்திரம் பதிவு செய்துள்ளதாக மறுநாளே என்னிடம் புகாரளித்தார். அதில், தோரணக்கல்பட்டி- குன்னம்பட்டியில் தமக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்” என முகமது அப்துல் காதர் குறிப்பிட்டு இருந்தார்.

விசாரணையில் அம்பலமான உண்மை:

புகார் தொடர்பாக கரூர் மாவட்ட பதிவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் அசல் ஆவணம் காணவில்லை என்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது அம்பலமானது. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் தான், தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யபட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
Crime: 4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்
4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Maharashtra Rahul Gandhi : காங்கிரஸ் உக்கிரம் ஆட்சியை பிடிக்க ஒரே FORMULA கட்டம் கட்டிய ராகுல்!S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
Crime: 4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்
4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”மன்னிப்பு கேளுங்க ஸ்டாலின்” தமிழ்த்தாய்க்கு அவமானம்? சீறும் தலைவர்கள்
”காவல்துறையின் ஈரல் அழுகிப்போச்சு – திமுகவுக்கு வன்னியர் வன்மம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
”காவல்துறையின் ஈரல் அழுகிப்போச்சு – திமுகவுக்கு வன்னியர் வன்மம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
Robo Shankar :
Robo Shankar : "ஒன்ஸ்மோர் கேட்டு கலவரம் பண்ணேன்..கமல் ஓங்கி அடிச்சுட்டார்..." ரோபோ சங்கர் ஓப்பன் டாக்
Breaking News LIVE 7th NOV 2024: கங்குவா படத்திற்கு தடைகோரிய வழக்கு: நாளை ஒத்திவைப்பு
Breaking News LIVE 7th NOV 2024: கங்குவா படத்திற்கு தடைகோரிய வழக்கு: நாளை ஒத்திவைப்பு
Embed widget