RN Ravi: தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்: பன்வாரிலால் பஞ்சாப் மாற்றம்!
RN Ravi appointed Governor of Tamil Nadu: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாகலாந்து கவர்னரான ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டின் கவர்னராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநிலத்தின் கூடுதல் கவர்னராக பணியாற்றி வந்தார். அவரை தற்போது முழுநேர பஞ்சாப் ஆளுநராக அறிவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாகலாந்து கவர்னரான ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டின் கவர்னராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ்., அதிகாரியான ஆர்.என்.ரவி, 1976 கேரளா கேடர் பேட்ஜ் அதிகாரி ஆவார். பிகாரைச் சேர்ந்த ரவி, நாகலாந்தின் ஆளுநராக கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு பணியாற்றிய ரவி, தற்போது தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த ஆர்.என்.ரவி?
ரவீந்திர நாராயண ரவி என்ற ஆர்.என்.ரவி ஐபிஎஸ் அதிகாரி ஆவார். பீகார் மாநிலம் பாட்னாவில்1953ம் ஆண்டு ஏப்ரல் 3 ல் பிறந்த இவர் 1976ல் ஐபிஎஸ் அதிகாரியானார். உளவுத்துறை சிறப்பு இயக்குநராக பணிபுரிந்து 2012ல் பணி ஓய்வு பெற்ற இவர், புலனாய்வு கூட்டுக் குழுவில் சேர்மனாக 2014 முதல் பொறுப்பு வகித்து வந்தார். துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஆர்.என்.ரவியை 2018ல் மத்திய அரசு நியமித்தது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் உள்நாட்டு பாதுகாப்பு துணை ஆலோசகராக பணியாற்றி வந்தார்.
தீவிரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகள், உள்ளூர் புரட்சி இயக்கங்களை ஒடுக்குதல், நாகலாந்தின் அமைதி பேச்சுவாரத்தையில் முக்கிய பங்கு வகித்தவர் என்று பல்வேறு வகையில் ஆர்.என்.ரவிக்கு அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புலனாய்வு துறையில் வடகிழக்கு பகுதியில் அவருக்கு இருந்த அனுபவத்தின் அடிப்படையில் நாகலாந்தின் ஆளுநராக 2019 ஆகஸ்டில் நியமிக்கப்பட்டார்.
புதிய ஆளுநரான ஆர்.என்.ரவிக்கு சமூகவலைதளங்களில் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Person who stands in right side is RN Ravi new governor of tamilnadu pic.twitter.com/6RVo4XzPY1
— Arun Kumar 😊🎊🎉❤️🤯💯💥🌹☁️🌟🍟 அருண்குமார் (@Kumarsivesh111) September 9, 2021
President Ramnath Kovindji has appointed RN Ravi as the new Governor of Tamil Nadu #RnRavi #Governor #TamilnaduNews pic.twitter.com/SOkXY7uOkf
— BJP Nilgiris (@BJP4TheNilgiris) September 9, 2021
இது தொடர்பாக பிறக்கப்பிக்கப்பட்ட இந்திய குடியரசுத் தலைவரின் ஆணை இதோ...
இதேப் போல உத்தர்கண்ட் மாநில ஆளுநராக குர்மித்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல, அஸ்ஸாம் கவர்னர் ஜெகதீஷ் முஹி, நாகலாந்து ஆளுநராக கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.