Remdesivir Supply | அறிவிப்பு உண்மை.. பரவும் தகவல் தவறு ; ரெம்டெசிவர் தொடர்பாக பரவும் வைரல் போட்டோ!

ரெம்டெசிவர் மருந்து கிடைக்கும் இடங்கள் என்ற அறிவிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

FOLLOW US: 

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றனது.  மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.Remdesivir Supply | அறிவிப்பு உண்மை.. பரவும் தகவல் தவறு ; ரெம்டெசிவர் தொடர்பாக பரவும் வைரல் போட்டோ!

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்3 லட்சத்து  66 ஆயிரத்து 161 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 4.01 லட்சம், நேற்று 4.03  லட்சமாக இருந்த பாதிப்பு இன்று  3.66 லட்சமாக குறைந்துள்ளது. கொரோனாவுக்கான சிகிச்சையை பல்வேறு தரப்பினரும் எடுத்து வருகின்றனர். குறிப்பாக ரெம்டெசிவர் மருந்து கொரோனா காலத்தில் தவிர்க்க முடியாத மருந்தாக உள்ளது.

கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி, ரெம்டெசிவிர் மருந்தை அவசரக்காலப் பயன்பாடாக மிதமான கொரோனா நோய் அறிகுறி உள்ள நோயாளிகளிடம் (ஆக்சிஜன் செலுத்தப்படுபவர்கள்) பயன்படுத்தலாம். அதேசமயம் இந்த மருந்தை வேறு மருந்தோடு இணைத்துப் பயன்படுத்துவதால் தீங்கு ஏற்படாது என்ற சூழலில் பயன்படுத்தப்படலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் ரெம்டெசிவிர்  மருந்துக்கு பல்வேறு இடங்களிலும் பற்றாக்குறை ஏற்பட்டது. பல இடங்களில் கள்ள சந்தையிலும் விற்பனை செய்யப்பட்டன. 
Remdesivir Supply | அறிவிப்பு உண்மை.. பரவும் தகவல் தவறு ; ரெம்டெசிவர் தொடர்பாக பரவும் வைரல் போட்டோ!இந்நிலையில் ரெம்டெசிவர் மருந்து கிடைக்கும் இடங்கள் என்ற அறிவிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.11 இடங்களில் எவ்வளவு கையிருப்பு உள்ளது என்ற விவரங்கள் அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. இதனை பலரும் மக்கள் பயன்படலாம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. ஆனால் அந்த அறிவிப்பு மருத்துவமனைகளுக்கானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் ரெம்டெசிவர் மருந்தை பெறவே அந்த அறிவிப்பு எனவும் அது பொதுமக்களுக்கானது அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதற்கிடையே ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை நாளொன்றுக்கு 20 ஆயிரம் அளவிற்கு உயர்த்தித் தருமாறு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முதல்வர் முக ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

Tags: Remdesvir Remdesvir tamilnadu Remdesvir supply Remdesvir india Remdesvir use

தொடர்புடைய செய்திகள்

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

டாப் நியூஸ்

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!