மேலும் அறிய

கரூர் மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றிற்கு ஒரு லட்சத்து, 953 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 4 பாசன வாய்க்காலில் 1,220 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் தேதி அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் காலை வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியாகவும், மாலையில் வினாடிக்கு 80 ஆயிரம்  கனடியாகவும் அதிகரித்தது. பின்னர் இரவில் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகமானது. காலை வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி உட்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.



கரூர் மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

மேட்டூரில் இருந்து விடப்பட்ட தண்ணீரின் காரணமாக மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 2 ஆயிரத்து, 173 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றிற்கு ஒரு லட்சத்து, 953 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 4 பாசன வாய்க்காலில் 1,220 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேட்டூர் தண்ணீரால் தற்போது மாயனூர் கதவணை கடல் போல் காட்சியளிக்கிறது.


கரூர் மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், கரூர் மாவட்டம் நொய்யல் மரவாபாளையம், சேமங்கி, பூங்கோடை வழியாக தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் வழியே சென்று கொண்டிருக்கிறது. இங்கிருந்து காவிரி ஆற்றில் வெள்ள நீர் இரு கரைகளையும் தொட்டபடி திருச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் வருவாய்த்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றுக்குச் சென்று குளிக்கவும், மீன்பிடிக்கவும், நீச்சல் அடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் தண்ணீரை பொதுமக்கள்  பார்த்துச் சென்றனர்.


கரூர் மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும், காவிரி ஆற்றில் சேர்ந்து, மாயனூர் கதவணைக்கு வந்து சேர்கிறது. இதனால் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, ஒரு லட்சத்து, 2,173 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதி குறுவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், ஒரு லட்சத்து, 953 கன அடி தண்ணீரும், நான்கு கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவேரி பாசனப் பகுதிகளில் அடுத்த மாதம், சம்பா சாகுபடி துவங்க உள்ள நிலையில், மாயனூர் கதவனுக்கு மீண்டும் வினாடிக்கு, ஒரு லட்சம் கன அடி வரை தண்ணீர் வரத்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget