'நீ SC BDO தானே... தூக்கி அடிச்சிருவேன்' - அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒருமையில் பேசியதாக வட்டார வளர்ச்சி அலுவலர் புகார்
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக பணிபுரிபவர் ராஜேந்திரன். இவரை நேற்று 27.3.22 காலை போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சிவகங்கை வீட்டிற்கு வர சொல்லியாக கூறப்படுகிறது.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக போக்குவரத்துறை அமைச்சர் மீது முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் அளித்திருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக பணிபுரிபவர் ராஜேந்திரன். இவரை நேற்று 27.3.22 காலை போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சிவகங்கை வீட்டிற்கு வர சொல்லியாக கூறப்படுகிறது. அதனை கேட்டு அவரும், ஊராட்சி ஒன்றிய (கிராம ஊராட்சி) ஆணையாளர் அன்புகண்ணன் ஆகியோர் சென்றுள்ளனர்.
வீட்டின் உள்ளே நுழைந்த உடன் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ராஜேந்திரனை நீ SC BDO தானே என்று கூறி நீ சேர்மன் (அதிமுக) பேச்சை கொண்டு தான் நடப்பாய், நாங்கள் சொல்வதை கேட்பது இல்லை என்று கூறி SC BDO என்று 6 தடவைக்கு மேல் SC BDO என்று கூறியுள்ளார். உடனே உன்னை தூக்கி அடிக்க வேண்டும் என அமைச்சர் கூறி உள்ளதாக தெரிகிறது.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் BDO ஆக பணியாற்றி வரும் ராஜேந்திரன் அவர்களை முதுகுளத்தூர் தொகுதி MLA ராஜகண்ணப்பன் அமைச்சர் என்பதால் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி ராஜேந்திரன் BDO அவர்களை சமுதாய ரீதியாக மிகக் கீழ்த்தரமாக திட்டியுள்ளார்.@mkstalin
— மாமள்ளர் (Mamallar Kabilan) (@kabilanmks) March 28, 2022
Expecting your action pic.twitter.com/HhWBP0x8Jg
உன்னை AD கிட்ட சொல்லி உடனே தூக்கி அடிக்கிறேன் என்று ஒருமையில் பேசி உள்ளதாக கூறினார். இதனையடுத்து மீண்டும் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அவரை சந்திக்காமல் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மனம் நொந்து போன ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் வீட்டில் நடந்த அனைத்தையும் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்