மேலும் அறிய

RC Renewal Fees: வாகனங்கள் வெச்சிருக்கீங்களா? ஆர்.சி உட்பட எதுக்கெல்லாம் விலை உயர்வு வந்திருக்குன்னு பாருங்க..

RC Renewal After 15 Years Fees: பழைய வாகனங்களுக்கான ஆர்சி புத்தக புதுப்பிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பழைய வாகனங்களுக்கு ஆர்சி மற்றும் தகுதி சான்றிதழ் கட்டணங்களை மாநில போக்குவரத்துறை அதிகரித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி 15 வருட பழைய வாகனங்களுக்கான ஆர்சி புத்தகம் புதுப்பிப்பு மற்றும் தகுதி சான்றிதழ் ஆகியவற்றிற்கான கட்டணம் 3 முதல் 10 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துறை அறிவிப்பின்படி இனிமேல் 15 வருட பழைய இருச்சக்கர வாகனங்களுக்கான ஆர்சி புத்தகம் புதுப்பிக்க 1000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக அந்தத் தொகை 300 ரூபாயாக இருந்தது. அதேபோல் 15 வருட பழைய ஆட்டோக்களுக்கான ஆர்சி புத்தக புதுப்பிப்பு கட்டணம் 600 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 15 வருட பழைய கார்களுக்கான ஆர்சி புதுப்பிப்பு கட்டணம் 600 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

15 ஆண்டு பழைய வாகனங்களுக்கான ஆர்சி புதுப்பிப்பு கட்டணம்:

வாகனம் பழைய கட்டணம் புது கட்டணம்
இரு சக்கர வாகனம் 300 1000
ஆட்டோ 600 2,500
கார் 600 5000
இறக்குமதி செய்த இருசக்கர வாகனம் 2500 10,000
இறக்குமதி செய்த கார் 5000 40,000

இவை தவிர வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலானவற்றின் ஆர்சி புதுப்பிக்க கட்டணமும் உயர்ந்துள்ளது. இந்தத் தொகை 2,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக அதிகரிப்பு. மேலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட கார்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தால் அவற்றிற்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் அந்த கார்களின் ஆர்சி புத்தக புதுப்பிக்க 5000 ரூபாய்க்கு பதிலாக 40,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 15 வருட பழைய வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் பெரும் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மோட்டர் சைக்கிளுக்கு தகுதி சான்றிதழ் கட்டணம் 400 ரூபாயும், ஆட்டோக்களுக்கு 800 ரூபாயும், பெரிய ரக வாகனங்களுக்கு 1000 ரூபாய் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மத்திய சாலை போக்குவரத்துறையின் வாஹன் மென்பொருளில் இந்தப் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதை கருத்தில் கொண்டே இந்த விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாநில போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் உள்ளது தான் என்றும் போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சூழலில் திடீரென 15 வருட பழைய ஆட்டோகளை புதுப்பிக்கும் கட்டணம் உயர்ந்தை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தப்போவதாக் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் சூழலில் தற்போது இந்த சான்றிதழ் கட்டணங்களும் உயர்வது பெரும் சிக்கலாக அமைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். புதிய வாகனங்களுக்கான பதிவு கட்டணம் எதுவும் மாற்றமில்லாமல் அதே நிலையில் தொடர்கிறது. பழைய வாகனங்களுக்கு மட்டுமே இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS About TVK Vijay:
EPS About TVK Vijay: "அதிமுகவை பற்றி விஜய் பேசாமல் இருப்பது குறித்து மற்றவர்கள் ஏன் துடிக்கிறார்கள்" -இபிஎஸ்.
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை - தமிழகத்தின் இன்றைய வானிலை நிலவரம் என்ன? எங்கெல்லாம் மழை வரும்?
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை - தமிழகத்தின் இன்றைய வானிலை நிலவரம் என்ன? எங்கெல்லாம் மழை வரும்?
Chennai Power Cut: சென்னைவாசிகளே! இன்று எந்த ஏரியாவில் மின் தடை தெரியுமா?
Chennai Power Cut: சென்னைவாசிகளே! இன்று எந்த ஏரியாவில் மின் தடை தெரியுமா?
Breaking News LIVE 4th NOV 2024: இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை திரும்பும் மக்கள்!
Breaking News LIVE 4th NOV 2024: இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை திரும்பும் மக்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS About TVK Vijay:
EPS About TVK Vijay: "அதிமுகவை பற்றி விஜய் பேசாமல் இருப்பது குறித்து மற்றவர்கள் ஏன் துடிக்கிறார்கள்" -இபிஎஸ்.
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை - தமிழகத்தின் இன்றைய வானிலை நிலவரம் என்ன? எங்கெல்லாம் மழை வரும்?
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை - தமிழகத்தின் இன்றைய வானிலை நிலவரம் என்ன? எங்கெல்லாம் மழை வரும்?
Chennai Power Cut: சென்னைவாசிகளே! இன்று எந்த ஏரியாவில் மின் தடை தெரியுமா?
Chennai Power Cut: சென்னைவாசிகளே! இன்று எந்த ஏரியாவில் மின் தடை தெரியுமா?
Breaking News LIVE 4th NOV 2024: இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை திரும்பும் மக்கள்!
Breaking News LIVE 4th NOV 2024: இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை திரும்பும் மக்கள்!
Nalla Neram Today Nov 04: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today Nov 04: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasipalan Today Nov 4: மிதுனத்துக்கு பாசம்; கடகத்துக்கு செலவு- உங்கள் ராசிக்கான பலன்?
Rasipalan Today Nov 4: மிதுனத்துக்கு பாசம்; கடகத்துக்கு செலவு- உங்கள் ராசிக்கான பலன்?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
Embed widget