ஓபிஎஸ் இடத்தில் உதயகுமார்! அதிமுக சட்டமன்றக்குழு துணைத்தலைவராக நியமனம்
திமுக சட்டமன்றக்குழு துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்,
![ஓபிஎஸ் இடத்தில் உதயகுமார்! அதிமுக சட்டமன்றக்குழு துணைத்தலைவராக நியமனம் RB udhayakumar oppointed as Deputy leader of opposition in the Tamil Nadu Legislative Assembly. ஓபிஎஸ் இடத்தில் உதயகுமார்! அதிமுக சட்டமன்றக்குழு துணைத்தலைவராக நியமனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/19/cb13d190e3c00750412ad4d035f82be41658211790_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திமுக சட்டமன்றக்குழு துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படுவதாக அ.தி.மு.க.-வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சி சார்பில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி துணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதுடன், அவரிடமிருந்த எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் திரு.@EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/KFJvseUi4O
— AIADMK (@AIADMKOfficial) July 19, 2022
மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் திரு.@EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/F19VLlFISO
— AIADMK (@AIADMKOfficial) July 19, 2022முன்னதாக,துணை பொதுச் செயலாளர்கள்:
அதிமுக துணை பொதுச்செயலாளர் என புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு கே.பி. முனுசாமி மற்றும் நத்தம் விசுவநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பொன்னையன் பதவி மாற்றம்:
அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகித்த சி.பொன்னையன் மாற்றப்பட்டு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக இருந்த தமிழ்மகன் உசேன், கழக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் பொன்னையனுக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கழக தலைமை செயலாளர்:
அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி பதவி வகித்த, அதிமுக கழக தலைமை கழக செயலாளர் பொறுப்பிற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கழக அமைப்பு செயலாளர்கள்:
அதிமுக அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சி.வி சண்முகம், பி. தனபால், கே.பி. அன்பழகன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின், ராஜன் செல்லப்பா, பாலகங்கா ஆகிய 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)