மேலும் அறிய

Ration Shop : நாளை முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள்.! தாயுமானவர் திட்டம் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Ration Shop : தாயுமானவர் திட்டத்தில் ஜுன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வீடு தேடி வரும் உணவுப்பொருட்கள்

தமிழகம் முழுவதும் 2 கோடியே 28 லட்சத்து 12,942 ரேஷன் கார்டுகளுக்கு 34 ஆயிரத்து 916 நியாய விலை கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விலையில்லா அரிசி, மானிய விலையில் பருப்பு, கோதுமை, சக்கரை, பாமாயில்  உள்ளிட்ட உணவுப்பொருட்கள்  ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளால் ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் நின்று வாங்க முடியாமல் தவித்து வந்தனர். மேலும், உடல் நிலை பாதிப்பால் வீட்டில் இருந்து வெளியே நடக்க முடியாத காரணத்தால் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

தமிழக அரசின் தாயுமானவர் திட்டம்

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக தேர்தல் பணிகள் நடைபெற்றதால் வீட்டிற்கு சென்று உணவுப்பொருட்கள் வழங்கும் பணி சற்று பாதிக்கப்பட்டது. தற்போது புதிய அரசு பதவியேற்ற நிலையில் முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டம் நீட்டிக்கப்படுமா.? அல்லது நிறுத்தப்படுமா.? என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்த நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் நாளை மற்றும் நாளை மறு தினம் வீடுகளுக்கே நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

இது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சென்னை மண்டலம் பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜுன் மாதத்தின் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர்,

தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பல்லாவரம், குரேம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய 18 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
Embed widget