மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Ramanathapuram: 'ஒப்பந்ததாரரின் கெட்டித்தாரத்தனம்' அம்பலம்.. - வைரல் வீடியோ..!
உயர் அழுத்த மின்சாரம் பாய்கின்ற மின் கம்பியில் எந்தவித பாதுகாப்பும் இன்றி கொக்கி போட்டு மின்சாரத்தை திருடி அரசு ஒப்பந்த பணியினை மேற்கொள்வது கிராமத்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கழிவு நீர் கால்வாய் திட்டப் பணிக்கு மின்கம்பத்தில் கொக்கி போட்டு இயந்திர பயன்பாட்டிற்கு மின் திருட்டு வீடியோ வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பெரியகுளம் கிராமத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது.
இந்த அரசு ஒப்பந்த திட்டப்பணி பயன்பாட்டிற்கு முழுமையாக கிராமத்தில் பயன்பாட்டில் உள்ள தெருவிளக்கு மின் கம்பத்தில் பட்டப் பகலில் வயர் மூலமாக நேரடியாக கொக்கியை இழுத்து ஒப்பந்த திட்டப்பணிக்கு பயன்படுத்தி மின் திருட்டில் ஈடுபட்டு ஒப்பந்த பணிகள் நடைபெற்று வரும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி வைரல் ஆகி வருகிறது.
இது போன்ற மிகவும் ஆபத்தான நிலையில் உயர் அழுத்த மின்சாரம் பாய்கின்ற மின் கம்பியில் எந்தவித பாதுகாப்பும் இன்றி கொக்கி போட்டு மின்சாரத்தை திருடி அரசு ஒப்பந்த பணியினை மேற்கொள்வது கிராமத்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு பணி செய்யும் பணியாளர்கள் கவனக்குறைவாக இருக்கும் நேரங்களில் சிறு குழந்தைகள் இந்த மின் கம்பியை தொட்டால் பெரும் உயிர் சேதம் ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion