Rajinikanth Income Tax Award: அதிக வரி செலுத்தியதால் ரஜினிக்கு விருது..! அன்றே அடித்துச் சொன்ன ரஜினி - வைரல் வீடியோ!
அதிக வரி செலுத்தியதால், நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை விருது வழங்கி கவுரவித்துள்ளது.
அதிக வரி செலுத்திய ரஜினி:
தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்திய காரணத்திற்காக, நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை விருது வழங்கி கவுரவித்துள்ளது.
வருமான வரி விழா:
நாடு முழுவதும் ஜூலை 24ம் தேதி வருமான வரி விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இந்த நாளில் வருமான வரி செலுத்துவதன் முக்கியத்துவத்தையும், வருமான வரி செலுத்துவதற்கான ஊக்கத்தையும் தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வருமான வரி விழாவையொட்டி, அதை கொண்டாடும் வகையில், நேற்று சென்னையில் உள்ள இசை அகாடமியில் சென்னை மற்றும் புதுச்சேரிக்கான வருமான வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தலைமையில் விழா நடைபெற்றது, இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையும் பங்கேற்றார்.
அப்போது அதிக வரி செலுத்தியவர்களை கவுரவிக்கும் வகையில், பாராட்டுக்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்தியதற்கான விருது வழங்கப்பட்டது. விருதை ரஜினிகாந்த் சார்பாக அவரது மகள் சௌந்தர்யாவிடம், தமிழிசை வழங்கினார்.
அன்றே சொன்னார் ரஜினி:
இந்நிலையில் நடிகர் ரஜினி, பல ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய ஓரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் நடிகர்களில் அதிக வரி செலுத்தி கொண்டிருக்கிறேன் என்று அன்றே கூறியிருக்கிறார்.
Honest Tax Payer @rajinikanth 😎💥#Rajinikanth #Jailer @rajinikanth #HighestTaxPayer_Rajini pic.twitter.com/pYSJXqPJmx
— ༺✧ 𝐍𝐢𝐭𝐡𝐲𝐚 ✧༻ (@Nithya_PC) July 24, 2022
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்