ரயில் பயணிகளுக்கு இனி ஒரே தீர்வு! புதிய 'ரயில் ஒன்' செயலி: டிக்கெட் முதல் உணவு வரை அனைத்தும் இங்கே
முன்பதிவு இல்லா டிக்கெட்டுகளையும் பயணியர் பெறலாம். தொலைதுார பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு தேவையான உணவுகளை 'ஆர்டர்' செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.
பயணச்சீட்டு முன்பதிவு உள்ளிட்ட ரயில் பயணிகளின் அனைத்துத் தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீா்வைப் பெறும் வகையில், ரயில் ஒன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தின் 40-ஆவது ஆண்டு தொடக்க தின கொண்டாட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதிய ரயில் ஒன் செயலியை அறிமுகப்படுத்தினார். முன்பதிவு அல்லது முன்பதிவில்லாத பயணச்சீட்டு, நடைமேடை சீட்டு, ரயில்கள் குறித்த சந்தேகங்கள், ரயில் பயணத்தின்போது ஆன்லைனில் உணவு முன்பதிவு, பொருட்களை எடுத்துச் செல்பவர்கள் முன்பதிவு, வாடகை கார் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த ஒரு செயலி மூலம் பயணிகள் மேற்கொள்ள முடியும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
எளிதில் பயன்படுத்தக் கூடிய இந்த செயலியை ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து வழங்கப்படும் என்றும், மற்ற ரயில் சார்ந்த சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் ரயில் ஒன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிக்க, நடைமேடை சீட்டு பெற என, ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி செயலிகளை பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது.இவை, அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரே செயலியில் எல்லா சேவைகளையும் அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, டில்லியில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'ரயில் ஒன்' என்ற செயலியை நேற்று வெளியிட்டார்.'ரயில் ஒன்' செயலி வாயிலாக, ரயில்வே துறையின் கீழ் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பயணியர் பெற முடியும்.
இதில் பயணியர் தங்கள் பயண டிக்கெட் முன்பதிவு செய்வதுடன், அதன் நிலைப்பற்றி அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் முன்பதிவு இல்லா டிக்கெட்டுகளையும் பயணியர் பெறலாம். தொலைதுார பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு தேவையான உணவுகளை 'ஆர்டர்' செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, ரயில்வே நிர்வாகத்தின் உதவி எண்களையும் எளிதாக தொடர்பு கொள்ளவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.பயணியர் பார்சல்களை வெளியூர்களுக்கு அனுப்புவது குறித்த தகவல்களை கேட்டறிய வசதியும் இச்செயலியில் இடம்பெற்றுள்ளது.
ஆண்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ்., இயங்குதளங்களை பயன்படுத்தி, இச்செயலியை டவுன்லோடு செய்யலாம்.ஏற்கனவே ஐ.ஆர்.சி.டி.சி., மற்றும் யு.டி.எஸ்., செயலிகளை பயன்படுத்தும் பயணியர், அதே விபரங்களை பதிவிட்டு, ரயில் ஒன் செயலியை பயன்படுத்தலாம்.மற்ற செயலிகளில் இருப்பதுபோல், ரயில்வே வாலட் வசதியும் உள்ளது. இதன் வாயிலாக, பல்வேறு செயலிகளுக்கு மாற்றாக, ஒரே செயலியை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





















