மேலும் அறிய

Pudukottai: புதுக்கோட்டையில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட வழக்கு; சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவு

புதுக்கோட்டையில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்:

புதுக்கோட்டை மாவட்டம்  இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில்  மனிதக்கழிவு கலந்த  விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதில், விசாரணையை  தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட எதிரிகளை  விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும்  வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பேருக்கு ஜாமின்:

ஆதிராவிட குடியிருப்பு  பகுதியில் உள்ள  மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் நீரை அசுத்தப்படுத்தியது தொடர்பான  வழக்கு விசாரணையில் உள்ளது. டிசம்பர் 26ம் தேதி  நடந்த இந்த சம்பவம் தொடர்பாக,  வெள்ளனூர் காவல் நிலையத்தில்  பதிவு செய்யப்பட்டு  புலன் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே, வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களிடம் சாதிய பாகுபாடு காட்டியதாக, கைதான 2 பேருக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்ன நடந்தது? 

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின்,  வேங்கை வயல் தெருவில் ஏராளமான பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி தவித்து வந்த அந்த மக்கள் முன்னெடுத்த  நீண்டகால,  போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2016-17ஆம் ஆண்டில் வேங்கை வயல் பகுதியில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தான், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.

குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மலம்:

இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்ததில் சிறுவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் சந்தேகத்தின் பேரில், நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. 

திட்டமிட்டு சதிச்செயல்?

அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக ஊர் பஞ்சாயத்து தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில், வேங்கைவயல் பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்தனர். திட்டமிட்டு யாரோ சிலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என புகார்:

இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே ஆகியோர் வேங்கை வயல் பகுதிக்கு வந்தனர். அப்போது, குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பாக ஊராட்சி தலைவர் மற்றும் பாதிக்கப்பட்ட பட்டியிலன மக்களிடம் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது, பேசிய பட்டியிலன மக்கள் அங்குள்ள அய்யனார் கோயிலில் தாங்கள் அனுமதிக்கப்படுவதிவில்லை என புகாரளித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அதிரடி:

இதையடுத்து கோயிலின் சாவியை கேட்டு பெற்ற மாவட்ட ஆட்சியர், பட்டியிலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தார். அப்போது, சாமி வந்ததை போன்று ஆடிய பெண் ஒருவர், பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசினார். அவரையும், அதே ஊரில் தேநீர் கடையில் இரட்டைக் குவளை முறையை கடைபிடித்து வந்த நபரையும் போலீசார் கைது செய்து இருந்தனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget