புதுச்சேரி ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நாளை முதல் டிக்கெட் கவுன்ட்டர்கள் மாற்றம் - காரணம் என்ன?
புதுச்சேரி ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர் இடமாற்றம். மறுசீரமைப்புப் பணி காரணமாக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தகவல்

புதுச்சேரி ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணி காரணமாக நாளை முதல் டிக்கெட் கவுன்ட்டர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மக்கள் அதிகம் விரும்பும் சுற்றுலாத்தலம் ஆகும். இங்கு செல்ல பேருந்து வசதி, ரயில் வசதி, விமான வசதிகள் இருக்கின்றன. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தங்களின் வசதிக்கு ஏற்ப அந்தந்த போக்குவரத்தை சேவையை பயன்படுத்துகின்றார்கள். சென்னைக்கு அருகே உள்ள மக்கள் பேருந்து சேவையை அதிகம் பயன்படுத்துவார்கள். பிற நாடுகள், மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் விமானத்தில் வருவார்கள். புதுச்சேரி சுற்றுலா தலங்களை காண தமிழ்நாட்டிற்கு தொலைவில் இருக்கும் மக்கள் வரும் ரயில் சேவையை பயன்படுத்தி வருவார்கள். படுக்கும் வசதியுடன் குறைந்த செலவு என்பதால் இவர்கள் ரயிலையே அதிகம் தேர்வு செய்கிறார்கள்.
தற்போது, ரயில் சேவையை பயன்படுத்தும் மக்களுக்கு தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, புதுச்சேரி ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணி காரணமாக நாளை முதல் டிக்கெட் கவுன்ட்டர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. முன்பதிவு டிக்கெட் கவுன்ட்டர், கெளசிக முருகன் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் செயல்படும் என்றும் முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்ட்டர் பொன்லைட் பூத் அருகே உள்ள புதிய நுழைவாயிலில் செயல்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.





















