‘ப்ளீஸ் என்ன விட்ருங்க' கதறிய சிறுமி ; மது குடிக்கவைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்
சென்னையை சேர்ந்த 3 வாலிபர்கள் சிறுமியிடம் பேச்சு கொடுத்து, தனியாக அழைத்துச் சென்று மது வாங்கிக் கொடுத்து ஓட்டல் அறையில் 31ம்தேதி அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
புதுச்சேரி: புதுச்சேரியில் மாயமான மும்பை சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுனர் மற்றும் சென்னையைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரியில் உறவினர் வீட்டுக்கு வந்த மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த மாதம் 30ம்தேதி மாயமானார். இதுகுறித்து அவருடைய பெற்றோர் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிந்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சிறுமி ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்வதை கண்டுபிடித்தனர். ஆட்டோ நம்பரை கொண்டு தமிழக பகுதியான கோட்டாகுப்பத்தை சேர்ந்த டிரைவர் மொய்தீன் (30), சிறுமியை ஓட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தனது வீட்டுக்கு அழைத்து சென்றதும் தெரியவந்தது.
மனைவியிடம் சிறுவன் (கிராப் முடி வைத்திருந்ததால்) என அறிமுகப்படுத்தி, மது வாங்கிக்கொடுத்து 2 முறை வன்கொடுமையில் ஈடுபட்டதும், பின்னர் போதையில் இருந்த சிறுமியை, 30ம் தேதி நள்ளிரவே புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் வாசலில் இறக்கி விட்டு தலைமறைவானதும் தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து மொய்தீனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கடந்த 2ம்தேதி இரவு புதுச்சேரி கடற்கரையில் அச்சிறுமியை போலீசார் மீட்டு விசாரித்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த 4 வாலிபர்கள் சிறுமியிடம் பேச்சு கொடுத்து, தனியாக அழைத்துச் சென்று மது வாங்கிக் கொடுத்து, கோட்டக்குப்பம் அருகிலுள்ள கடற்கரைக்கு அழைத்து சென்று ஓட்டல் அறையில் 31ம்தேதி அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததும், பின்னர் சிறுமியை சென்னைக்கு அழைத்து சென்றதும், கடந்த 2ம்தேதி வாடகை கார் மூலம் சிறுமியை தனியாக புதுச்சேரிக்கு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கோட்டக்குப்பம் கடற்கரை பகுதியில் ஓட்டலில் தங்கியிருந்தவர்களின் விவரங்களை தனிப்படையினர் சேகரித்தனர். அதன்படி சென்னையை சேர்ந்த 3 வாலிபர்களை தனிப்படையினர் பிடித்து, புதுவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. பெரியக்கடை போலீசார் போக்சோ மற்றும் கடத்தல் வழக்கு பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் கோட்டக்குப்பம் காஜா மொய்தீன், 34, மற்றும் சென்னையைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
அதேபோல பாதிக்கப்பட்ட சிறுமியையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்த சிறுமியை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரின் வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்தார். அந்த விசாரணையும், வாக்குமூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. புதுச்சேரியில் 16 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், ஒட்டுமொத்த தமிழகம் மற்றும் புதுச்சேரியையும் மீண்டும் அதிர வைத்திருக்கிறது.