பொங்கல் விடுமுறை அளிக்காமல் நேரடி வகுப்புகளை நடத்திய பள்ளி - ஆசிரியர்களை எச்சரித்த காவல்துறை
’’சகாய மாதா மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளியில் அரசின் உத்தரவை மீறி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய வகுப்பு நடத்தி உள்ளனர்’’
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டம் வாவறை பகுதியில் உள்ள சகாய மாதா மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படுவதாக பொதுமக்கள் புகாரை தொடர்ந்து நித்திரவிளை போலீசார் பள்ளிக்கு சென்று மாணவர்களை வெளியேற்றி ஆசிரியர்களை எச்சரித்து சென்றதால் பரபரப்பு.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஃபாரீனுக்கு பறக்கும் பனை ஓலை பெட்டிகள்...! - பனையை பணமாக்கும் ராமநாதபுரம் பெண்கள்
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சேலம் மாவட்டத்தில் சண்டை சேவல்கள் வளர்ப்போர் எண்ணிக்கை கிடு கிடு உயர்வு - சேவல் சண்டை நடத்த அனுமதி தர கோரிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு நேற்றும் இன்றும் விடுமுறை அளித்துள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டம் வாவறை பகுதியில் செயல்பட்டு வரும் சகாய மாதா மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளியில் அரசின் உத்தரவை மீறி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய வகுப்பு நடத்தி உள்ளனர். இது குறித்த தகவல் நித்திரவிளை போலீசாருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததை தொடர்ந்து பள்ளிக்கு போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர் அப்போது ஆசிரியர்கள் மாணவர்களை வகுப்புகளில் அமர்த்தி பாடம் நடத்தி கொண்டிருந்துள்ளனர். இதனை கண்ட போலீசார் மாணவ மாணவிகளை அதிரடியாக வெளியேற்றி ஆசிரியர்களை எச்சரித்து சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Pongal gift| தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசு வெல்லத்தில் ஊசி சிரஞ்ச் இருந்ததாக புகார்
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- 17 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை - கல்லூரி தாளாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
தொடர்ந்து மாணவர்கள் கூறும்போது தங்களை பொங்கல் கொண்டாட அனுமதிக்காமல் வகுப்புகளுக்கு வர வற்புறுத்தி ஆசிரியர்கள் துன்புறுத்தி வந்ததாகவும் குற்றஞ்சாட்டினர். கொரோனா போன்ற தொற்று நோய்கள் அதிகமாக பரவி வரும் வேளையில் மாணவர்களின் நலன் மீது அக்கறை கொள்ளாமல் மதிப்பெண்கள் மீது மட்டும் அக்கறை கொள்ளும் இதுபோன்ற பள்ளிகள் மீது பள்ளி கல்வி துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு