மேலும் அறிய

Pongal Bus Ticket Booking: தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்வது எப்படி? - முழு விவரம் உள்ளே..!

Pongal Special Bus Online Booking: பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கியுள்ளது. 

பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கியுள்ளது. 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இம்முறை ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை வருவதால், வெளியூரில் இருக்கும் பெரும்பாலானோர் வியாழக்கிழமை (ஜனவரி 12) முதலே சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை இருப்பதால் முன்கூட்டி  பயணம் செய்வதே சிறந்தது என முடிவெடுத்து அதற்கேற்றாற்போல் திட்டமிட்டுள்ளனர். 

வழக்கமாக இயக்கப்படும் ரயில்கள், சிறப்பு ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், ரயில் பயணத்தை நம்பியிருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். அதேசமயம் ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊருக்கு செல்ல வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அரசுப் பேருந்துகளை நாடியுள்ளனர். இதனால் தமிழக அரசின் போக்குவரத்துறை துறையால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளில் விறுவிறுப்பான முன்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் தான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்ப தமிழக அரசு 16,932 சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. 

இயக்கப்படும் பேருந்துகளின் விவரம் 

 சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் ஜனவரி 12 ஆம் தேதி கூடுதலாக 2,751 பேருந்துகளும், 13 ஆம் தேதி கூடுதலாக 3,955 பேருந்துகளும், 14 ஆம் தேதி 4,043 பேருந்துகளும் என மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து 6, 183 பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

இதேபோல் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர ஜனவரி 16 ஆம் தேதி 4,334 பேருந்துகளும், 17 ஆம் தேதி 4,961 பேருந்துகளும், 18 ஆம் தேதி 6300 பேருந்துகள் என மொத்தம் 15,595 இயக்கப்படுகிறது. இதனை செய்தியாளர்கள் சந்திப்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். 

பேருந்து பயணம் மேற்கொள்பவர்கள் கவனத்திற்கு 

  • கோயம்பேடு தவிர்த்து மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் , தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 5 சிறப்பு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும். 
  • அதேபோல் கோயம்பேட்டில் 10, தாம்பரம் சானடோரியம் மற்றும் பூந்தமல்லியில் தலா ஒன்று என மொத்தம் 12 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படும்.
  • பேருந்துக்கான முன்பதிவுகளை நேரடியாகவோ அல்லது https://www.tnstc.in இணையதளம் வாயிலாகவோ செய்யலாம். அதேபோல் TNSTC Official App என்ற செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். 
  • சென்னையில் இருந்து ஜெயங்கொண்டம், அரியலூர் செல்வதற்கும், பூந்தமல்லி பைபாஸில் இருந்து ஓசூர்,கிருஷ்ணகிரி, தர்மபுரி செல்வதற்கும், சேலத்தில் இருந்து பெங்களூர் செல்வதற்கும் கோயம்பேடு முன்பதிவு நிலையத்திலேயே முதல்முறையாக முன்பதிவு செய்து பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 

  • பேருந்து இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார் தெரிவிப்பதற்கும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 9445014450, 9445014436 எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் தொடர்பாக 18004256151,044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களில் புகாரளிக்கலாம். 
  • மேலும் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pon Manikavel: இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்
இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
IND vs AUS: இதயங்கள் உடைந்த நாள்! பறிபோன உலகக்கோப்பை! இந்தியாவை நொறுக்கிய ஆஸ்திரேலியா!
IND vs AUS: இதயங்கள் உடைந்த நாள்! பறிபோன உலகக்கோப்பை! இந்தியாவை நொறுக்கிய ஆஸ்திரேலியா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்Harini Amarasuriya Profile : தேயிலை தொழிலாளியின் மகள்!இலங்கையை அலறவிட்ட சிங்கப்பெண்!யார் இந்த ஹரிணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pon Manikavel: இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்
இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
IND vs AUS: இதயங்கள் உடைந்த நாள்! பறிபோன உலகக்கோப்பை! இந்தியாவை நொறுக்கிய ஆஸ்திரேலியா!
IND vs AUS: இதயங்கள் உடைந்த நாள்! பறிபோன உலகக்கோப்பை! இந்தியாவை நொறுக்கிய ஆஸ்திரேலியா!
Breaking News LIVE 19th Nov 2024: நாகை, தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை, தஞ்சை நிலவரம் என்ன?
Breaking News LIVE 19th Nov 2024: நாகை, தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை, தஞ்சை நிலவரம் என்ன?
Sabarimala: சாமியே சரணம்! மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்த வரலாறு தெரியுமா?
Sabarimala: சாமியே சரணம்! மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்த வரலாறு தெரியுமா?
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Affordable EV List: அச்சுறுத்தும் காற்று மாசு - இந்திய சந்தையில் மலிவு விலை மின்சார கார்கள், உங்க சாய்ஸ் எது?
Affordable EV List: அச்சுறுத்தும் காற்று மாசு - இந்திய சந்தையில் மலிவு விலை மின்சார கார்கள், உங்க சாய்ஸ் எது?
Embed widget