மேலும் அறிய

Bank Holidays January 2024: வங்கிகள் பக்கம் போகாதீங்க..! பொங்கல் பண்டிகையால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை..!

Bank Holidays January 2024: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Bank Holidays January 2024: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை தொடங்கியுள்ளது.

வங்கிகள் விடுமுறை:

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் பொது விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், ஜனவரி மாதத்தில் மட்டும் 16 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டாலும், சில பகுதிகளில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிறது. அதேநேரம், அனைத்து வங்கிகளுக்குமான ஆன்லைன் சேவை தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்குதடையின்றி பணப்பர்வர்த்தனையை மேற்கொள்ளலாம்.

உள்ளூர் விடுமுறை:

ஜனவரி மாதத்தின் வார இறுதி விடுமுறையை தாண்டி, சிறப்பு தினங்களாக அனுசரிக்கப்படும்  புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஆனால், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படும். உதாரணமாக, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை/திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் வங்கிகள் மூடப்படும். ஆனால், அதே பண்டிகைக்காக மற்ற மாநிலங்களில் வங்கிகள் மூடப்படாது.

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு விடுமுறை:

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வழக்கமாக வழங்கப்படும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தாண்டி கூடுதலாக நான்கு  நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 13ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை அடிப்படையிலும், 14ம் தேதி வார இறுதி அடிப்படையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து,  ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும்  ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் விழாவிற்காகவும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு மக்கள் அதற்கேற்றவாறு தங்களுக்கான பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுமுறை தின பட்டியல்:

  • ஜனவரி 1: புத்தாண்டு (திங்கள் கிழமை)
  • ஜனவரி 7: ஞாயிற்று கிழமை
  • ஜனவரி 11: மிஸினரி தினம் (மிசோரம் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)
  • ஜனவரி 12: சுவாமி விவேகானந்தா ஜெயந்தி (மேற்கு வங்க வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)
  • ஜனவரி 13: இரண்டாவது சனிக்கிழமை
  • ஜனவரி 14: ஞாயிற்று கிழமை
  • ஜனவரி 15: பொங்கல்/ திருவள்ளூர் தினம் (தமிழ்நாடு, ஆந்திர பிரதேச வங்கிகளுக்கு விடுமுறை)
  • ஜனவரி 16: துசு பூஜை (மேற்கு வங்கம், அசாம் வங்கிகளுக்கு விடுமுறை)
  • ஜனவரி 17: குரு கோவிந்த் சிங் ஜெயந்தி
  • ஜனவரி 21: ஞாயிற்று கிழமை
  • ஜனவரி 23: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி 
  • ஜனவரி 25: ஹிமாச்சல் பிரதேச  தினம் (ஹிமாச்சல் பிரதேச வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)
  • ஜனவரி 26: குடியரசு தினம்
  • ஜனவரி 27: நான்காவது சனிக்கிழமை
  • ஜனவரி 28: ஞாயிற்று கிழமை
  • ஜனவரி 31: மீ-டேம்-மீ-ஃபை (அசாம் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Breaking News LIVE: வெகு விமரிசையாக நடந்து வரும் நெல்லையப்பர் திருக்கோயில் ஆனித்தேரோட்ட திருவிழா
Breaking News LIVE: வெகு விமரிசையாக நடந்து வரும் நெல்லையப்பர் திருக்கோயில் ஆனித்தேரோட்ட திருவிழா
டெல்லி முதல் தமிழ்நாடு வரை.. இந்தியாவை உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்கள்..
டெல்லி முதல் தமிழ்நாடு வரை.. இந்தியாவை உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்கள்..
Kamalhaassan : யாருமே செய்யாத ஒன்றை செய்திருக்கிறோம்... கல்கி படத்தில் தனது கேரக்டர் பற்றி கமல்
Kamalhaassan : யாருமே செய்யாத ஒன்றை செய்திருக்கிறோம்... கல்கி படத்தில் தனது கேரக்டர் பற்றி கமல்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

GV Prakash on Kallakurichi kalla sarayam : ”இழப்பீடுகள் எதையும் ஈடுசெய்யாது” ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்Vijay at Kallakurichi : கள்ளக்குறிச்சியில் விஜய்! நேரில் வந்து ஆறுதல்Arvind Kejriwal bail : கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! எப்போது வெளியே வருகிறார்? கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மிMK Stalin on Kallasarayam  : ”விஷச்சாராயம் எப்படி வந்துச்சி..களத்துக்கு போ உதய்” ஆணையிட்ட ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Breaking News LIVE: வெகு விமரிசையாக நடந்து வரும் நெல்லையப்பர் திருக்கோயில் ஆனித்தேரோட்ட திருவிழா
Breaking News LIVE: வெகு விமரிசையாக நடந்து வரும் நெல்லையப்பர் திருக்கோயில் ஆனித்தேரோட்ட திருவிழா
டெல்லி முதல் தமிழ்நாடு வரை.. இந்தியாவை உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்கள்..
டெல்லி முதல் தமிழ்நாடு வரை.. இந்தியாவை உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்கள்..
Kamalhaassan : யாருமே செய்யாத ஒன்றை செய்திருக்கிறோம்... கல்கி படத்தில் தனது கேரக்டர் பற்றி கமல்
Kamalhaassan : யாருமே செய்யாத ஒன்றை செய்திருக்கிறோம்... கல்கி படத்தில் தனது கேரக்டர் பற்றி கமல்
AUS vs BAN: இந்த டி20 உலகக் கோப்பையின் முதல் ஹாட்ரிக்.. அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி பாட் கம்மின்ஸ் கலக்கல்!
இந்த டி20 உலகக் கோப்பையின் முதல் ஹாட்ரிக்.. அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி பாட் கம்மின்ஸ் கலக்கல்!
Kallakurichi Hooch Tragedy :அதிகாலையில் 5 பேர்; மொத்தம் 50 பேர் - கள்ளச்சாராயத்தால் கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்
அதிகாலையில் 5 பேர்; மொத்தம் 50 பேர் - கள்ளச்சாராயத்தால் கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்
International Yoga Day 2024: சர்வதேச யோகா தினம் - ஸ்ரீநகரில் பிரதமர் மோடி; உலகம் முழுவதும் கொண்டாட்ட ஏற்பாடுகள்
International Yoga Day 2024: சர்வதேச யோகா தினம் - ஸ்ரீநகரில் பிரதமர் மோடி; உலகம் முழுவதும் கொண்டாட்ட ஏற்பாடுகள்
Vande Bharat Train: வந்தே பாரத் ரயில் உணவில் கரப்பான் பூச்சி: ரயில்வே தெரிவித்தது என்ன?
Vande Bharat Train: வந்தே பாரத் ரயில் உணவில் கரப்பான் பூச்சி: ரயில்வே தெரிவித்தது என்ன?
Embed widget