மேலும் அறிய
Advertisement
pongal 2022 | 10 ஆண்டுகளுக்கு பிறகு உசிலம்பட்டியில் நடந்த கிடா முட்டு போட்டி
’’இது போன்ற போட்டிகள் நாட்டு இனங்களை அதிகப்படுத்தும். இதனால் விவாசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உபதொழில்கள் மேம்படும்” என கிராம மக்கள் தெரிவித்தனர்’’
தென் மாவாட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகளைப் போல மாட்டுவண்டி பந்தையம், சேவல் சண்டை, கிடா முட்டு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் கிடா முட்டு போட்டி அரசு அனுமதியுடன் நடைபெற்றுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட ஜோடிகள் இந்த போட்டியில் பங்கேற்றன.
மதுரை: உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடா முட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பார்வையாளர்களும் கண்டு ரசித்தனர். #Abpnadu | #GOAT | #jallikattu | #Pongal2022 | #madurai | #pongalfestivel | #usilampatti | @SRajaJourno pic.twitter.com/IlNcEd2zdY
— Arunchinna (@iamarunchinna) January 22, 2022
இந்த கிடா முட்டு போட்டியில் தமிழ்நாடு கிடா முட்டு போட்டியாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இப் போட்டியை மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அரசு வழக்கறிஞர் வீரக்கதிரவன் துவங்கி வைத்தார். தொடர்ந்து உசிலம்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் அய்யப்பன், பாரதிய பார்வட் ப்ளாக் நிறுவனர் முருகன்ஜீ உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கொரோனா பாதுகாப்பு கருதி உள்ளூர் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆக்ரோசத்துடன் மோதிக் கொண்ட கிடாக்களை கண்டு ரசித்தனர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெரும் கிடாக்களுக்கு பித்தளை அண்டா, சில்வர் அண்டா, பேக், கேடையம் என பல்வேறு பரிசுகளை விழா கமிட்டியினர் வழங்கினர்.
“ 10 ஆண்டுகளுக்கு பின் கிடாய் முட்டு போட்டி வைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து இது போன்ற கலாச்சார விழாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இது போன்ற போட்டிகள் நாட்டு இனங்களை அதிகப்படுத்தும். இதனால் விவாசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உபதொழில்கள் மேம்படும்” என கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - pongal 2022 | நகரத்தார்கள் நடத்திய செவ்வாய் பொங்கல் விழா - 60 கிடாய்களை ஒரே இரவில் வெட்டி கோலாகலம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion