Pollachi Dindigul 4 lane project : பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
Pollachi Dindigul 4 lane project : பொள்ளாச்சி மற்றும் திண்டுக்கல் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ள 3ஆயிரத்து 649 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 வழிச்சாலை திட்டப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. எனவே வருகிற மே மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவுப்படுத்தப்படும் நெடுஞ்சாலைத்திட்டம்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கூட்ட நெரிசல் காரணமாக நீண்ட நேரம் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனையடுத்து புதிய புதிய சாலை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட இடத்திற்கு உடனடியாக சென்று சேர வழிவகை செய்யப்படுகிறது. அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 'பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ், பொள்ளாச்சியில் ஆச்சிபட்டியில் தொடங்கி திண்டுக்கல் கமலாபுரத்தில் நிறைவடையும் வகையில் நான்கு வழிச்சாலை திட்டமானது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. இந்த பணிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
131.96 கி.மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலை திட்டம்
சுமார் 7ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளது. மொத்தமாக 131.96 கி.மீ. துாரத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக 3ஆயிரத்து 649 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையில், ஒட்டன்சத்திரம் கமலாபுரம் இடையே 36.51 கி.மீட்டருக்கும், மடத்துக்குளம் ஒட்டன்சத்திரம் இடையே 45.38 கி.மீ தூரத்திற்கும், பொள்ளாச்சி- மடத்துக்குளம் இடையே 50.07 கி.மீ. தூரத்திற்கும் அமையவுள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகள் அதாவது சுமார் 80 சதவிகித வழித்தடம் புறவழிச்சாலையாக அமைக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியானது முடிவடைந்து பெரும்பாலன பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டது.மேலும் இந்த வழிசாலையில் ஏராளமான கட்டிடங்கள் மற்றும் தென்னை மரங்கள் இருப்பதால் அதனை வெட்டி அகற்றும் பணியானது ஒரு பக்கத்தில் நடைபெற்று வரும் நிலையில், மேம்பாலம் கட்டப்பட்டு சர்வீஸ் ரோடு அமைக்கப்படும் பணியானது விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவை மற்றும் பொள்ளாச்சி மக்கள் பெரிதும் பயன் அடையும் வகையில், சர்வீஸ் ரோடு வழியாக பாலத்தின் கீழே சுற்றிச் செல்லும் வகையில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.
3 மாத காலத்தில் முடியும் நெடுஞ்சாலை திட்டம்
இந்த நான்கு வழிச்சாலையை கோவை சாலையுடன் இணைக்க கான்கிரீட் பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புளியம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, பகுதிகளில் பாலம் பணிகள் மட்டும் நிறைவு செய்ய வேண்டியுள்ளது. இப்பணிகள் அடுத்த 3 மாத காலத்திற்குள் நிறைவடைந்து மே மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















