மேலும் அறிய

Politicians as Marvel Characters: பிரதமர்தான் அயர்ன்மேன்.. முதலமைச்சர் கேப்டன் அமெரிக்கா.. சூப்பர்ஹீரோக்களாக மாறிய இந்திய அரசியல்வாதிகள்..!

இந்திய அரசியல் தலைவர்களை மார்வெல் சூப்பர் ஹீரோக்களாக சித்தரித்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் உலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் மார்வெல். இவர்களின் தயாரிப்புகளில் வெளிவந்த படங்களிலே கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள கதாபாத்திரங்களாக உலா வருவது அவெஞ்சர்ஸ் கதாபாத்திரம்.

அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களான அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா, தோர், ஹல்க், ஸ்பைடர்மேன், பிளாக்விடோ கதாபாத்திரங்களுக்கு இந்தியாவிலே கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதற்கு அவெஞ்சர்ஸ் சீரிஸ் படங்கள் இந்தியாவில் குவித்த வசூலே சிறந்த உதாரணம் ஆகும்.

இந்த நிலையில், தனியார் அரசியல் ஆலோசக நிறுவனம் ஒன்று இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களை உலகப்புகழ்பெற்ற மார்வெல் கதாபாத்திரங்களாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி – அயர்ன் மேன்:

Politicians as Marvel Characters:  பிரதமர்தான் அயர்ன்மேன்.. முதலமைச்சர் கேப்டன் அமெரிக்கா.. சூப்பர்ஹீரோக்களாக மாறிய இந்திய அரசியல்வாதிகள்..!

அவெஞ்சர்ஸ் படங்களிலே உலகளவில் அதிக கதாபாத்திரங்களை கொண்ட கதாபாத்திரமாக உலா வருவது அயர்ன்மேனும், கேப்டன் அமெரிக்காவுமே. இதில் அயர்ன்மேன் கதாபாத்திரமாக இந்திய பிரதமர் மோடியை சித்தரித்து புகைப்படம் வெளியிட்டுள்ளனர். அதன்கீழே இந்திய அரசியலின் இரும்பு மனிதர் என்று குறிப்பிட்டுள்ளனர். தைரியமான முடிவுகளை எடுப்பதாலும், தலைமை பண்புகள் காரணமாகவும் அவரை அயர்ன்மேன் என்று அழைப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் – கேப்டன் அமெரிக்கா:

Politicians as Marvel Characters:  பிரதமர்தான் அயர்ன்மேன்.. முதலமைச்சர் கேப்டன் அமெரிக்கா.. சூப்பர்ஹீரோக்களாக மாறிய இந்திய அரசியல்வாதிகள்..!

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரமாக சித்திரத்துள்ளனர். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினை அரசியலின் உறுதியான பாதுகாவலன் என்று குறிப்பிட்டுள்ளனர். மு.க.ஸ்டாலின் கேப்டன் அமெரிக்கா போல அமைதியான மற்றும் அடக்கமான நடத்தையும், அபரிமிதமான வலிமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறார். தமிழ்நாடு முதலமைச்சராக பல இன்னல்களை எதிர்கொண்டாலும் திறம்பட சமாளித்து மீண்டு வருகிறார்.

ராகுல்காந்தி – ஸ்பைடர்மேன்:

Politicians as Marvel Characters:  பிரதமர்தான் அயர்ன்மேன்.. முதலமைச்சர் கேப்டன் அமெரிக்கா.. சூப்பர்ஹீரோக்களாக மாறிய இந்திய அரசியல்வாதிகள்..!

அயர்ன்மேனின் செல்லப்பிள்ளையாக உலா வரும் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்திய அரசியலின் பீட்டர்பார்க் என்று ராகுல்காந்தியை சித்திரித்துள்ளனர். இந்தியாவின் பீட்டர் பார்க்கர் தேர்தல் நாயகன் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் போலவே ராகுல்காந்தியும் தன் அரசியல் பயணத்தில் வெற்றியையும், சவாலையும் சந்தித்து வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

நிதிஷ்குமார் – ப்ரொபசர் எக்ஸ்:

Politicians as Marvel Characters:  பிரதமர்தான் அயர்ன்மேன்.. முதலமைச்சர் கேப்டன் அமெரிக்கா.. சூப்பர்ஹீரோக்களாக மாறிய இந்திய அரசியல்வாதிகள்..!

அவெஞ்சர்ஸ் சீரிஸ் போலவே மிக பிரபலமான திரைப்பட வரிசை எக்ஸ் மேன் சீரிஸ் படங்கள். அதில் வரும் ப்ரொபசர் எக்ஸ் கதாபாத்திரமே அனைவரையும் வழிநடத்தும் தலைவராக இருப்பார். இந்திய அரசியலில் ப்ரொபசர் எக்ஸ் –ஆக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளார். நிதிஷ்குமார் இந்திய அரசியலின் தெளிவான கட்டுப்பாட்டாளர் என்று புகழ்ந்துள்ளனர்.

ஜெகன்மோகன் ரெட்டி – தோர்:

Politicians as Marvel Characters:  பிரதமர்தான் அயர்ன்மேன்.. முதலமைச்சர் கேப்டன் அமெரிக்கா.. சூப்பர்ஹீரோக்களாக மாறிய இந்திய அரசியல்வாதிகள்..!

அவெஞ்சர்ஸ் படங்களில் கடவுளாக உலா வருபவர் தோர். கட்டுடலையும், அபார சக்தியையும் கொண்டுள்ள தோர் கதாபாத்திரத்திற்கு என்றே கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்திய அரசியலின் தோர் கதாபாத்திரமாக ஜெகன்மோகன் ரெட்டியை சித்தரித்துள்ளனர். அவரை இந்திய அரசியலின் முன்னோடி ஒழுக்கமான தலைவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் – ஆன்ட் மேன்:

Politicians as Marvel Characters:  பிரதமர்தான் அயர்ன்மேன்.. முதலமைச்சர் கேப்டன் அமெரிக்கா.. சூப்பர்ஹீரோக்களாக மாறிய இந்திய அரசியல்வாதிகள்..!

மார்வெல் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று ஆன்ட் மேன், அவெஞ்சர்ஸ் எண்ட் கேமில் காலத்தின் பின்னோக்கி செல்ல முடியும் என்று மற்ற சூப்பர்ஹீரோக்களுக்கு உணர்த்தி அவர்களை அழைத்துச் சென்று கதையின் முக்கிய திருப்புமுனையாக இருந்தவர். இந்திய அரசியலின் ஆன்ட் மேனாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சித்தரித்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் இந்திய அரசியலின் வடிவத்தை மாற்றுபவர் என்று கூறியுள்ளனர்.

பிரியங்கா காந்தி – கேப்டன் மார்வெல்:

Politicians as Marvel Characters:  பிரதமர்தான் அயர்ன்மேன்.. முதலமைச்சர் கேப்டன் அமெரிக்கா.. சூப்பர்ஹீரோக்களாக மாறிய இந்திய அரசியல்வாதிகள்..!

மாபெரும் ஆற்றலை கொண்ட கதாபாத்திரமாகவும் எப்பேற்பட்ட அசுர தீய சக்திகளையும் அழிக்கும் சக்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் கேப்டன் மார்வெல். இந்திய அரசியலின் கேப்டன் மார்வெல்- ஆக பிரியங்கா காந்தியை குறிப்பிட்டுள்ளனர். அரசியலின் ஒளிரும் ஆற்றல் மிக்கவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
Breaking News LIVE: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 நாகை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி

IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!

metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
Breaking News LIVE: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 நாகை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
Breaking News LIVE: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 நாகை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
Tamayo Perry: கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை

14 years of Kalavani: டெல்டா மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்த “களவாணி” படம்.. இன்றோடு ரிலீசாகி 14 ஆண்டுகள் நிறைவு!

Rasipalan: விருச்சிகத்துக்கு உதவி..தனுசுக்கு முயற்சி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?

Embed widget