மேலும் அறிய

விவசாயமா? சாயக்கழிவா? - மன்னார்குடி ஜவுளிப்பூங்கா திட்டத்திற்கு அன்புமணி இராமதாஸ் எதிர்ப்பு

ராட்சத இயந்திரங்கள் மூலம் கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நீர் மட்டம் கடுமையாகப் பாதிக்கும்.

சென்னை: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் சாயப்பட்டறையுடன் கூடிய ஜவுளிப்பூங்கா அமைக்கத் திட்டமிட்டுள்ள திமுக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது., 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டை கிராமத்தில் சாயப்பட்டறையுடன் கூடிய ஜவுளி பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதற்கு அப்பகுதியில் உள்ள மக்களும், உழவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேட்டை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்து காவிரி பாசன மாவட்டங்களில் சாயப்பட்டறையுடன் கூடிய ஜவுளிப் பூங்காவை அமைப்பது கண்டிக்கத்தக்கது.

 

சாயப் பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்காக்கள் அமைக்கப்படுவதால் ஏற்படும் கேடுகள் எல்லையில்லாதவை. சாயப்பட்டறைகளால் இரு வகையாக பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலாவது சாயப்பட்டறைகளின் தேவைக்காக தினமும் கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் ராட்சத எந்திரங்களைக் கொண்டு உறிஞ்சி எடுக்கப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.

 

அடுத்ததாக சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் வேதிப்பொருள்களும், நச்சுப் பொருள்களும் கலந்த கழிவுநீர் நிலம், நீர், வாயு உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தி விடும். அதனால் தான் சாயப்பட்டறைகளை சுற்றுச்சூழலின் முதல் எதிரியாக பாமக கருதுகிறது.

 

தமிழ்நாட்டில் சாயப்பட்டறைகள் செயல்படும் எந்த பகுதியிலும் அவற்றின் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படுவதில்லை. கடலோரப்பகுதிகளிலும், ஆற்றங்கரைகளிலும் அமைந்திருக்கும் சாயப்பட்டறைகளின் கழிவு நீர் அரைகுறையாக சுத்திகரிக்கப்பட்டு ஆறுகளிலும், கடல்களிலும் கலக்கவிடப்படுகின்றன. காவிரி, தென்பெண்ணை, பவானி, அமராவதி, நொய்யல் உள்ளிட்ட பல ஆறுகள் சாயப்பட்டறை கழிவுகளால் தான் கொஞ்சம், கொஞ்சமாக கொலை செய்யப்பட்டு வருகின்றன.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் அமைக்கப்படும் ஜவுளி பூங்காவாலும் இதே போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு மிக மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்புகள் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காகத் தான் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாகப் போராடியது. அதன் பயனாகத் தான் முந்தைய ஆட்சியில் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்தார். அரும்பாடு பட்டு காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை திமுக அரசு சிதைத்து விடக் கூடாது.

 

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்மை சார்ந்த தொழில்களை அமைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு செய்யவில்லை. அதை விடுத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் வேளாண்மைக்கு வேட்டு வைக்கும் சாயப்பட்டறைகளை அமைப்பதை அனுமதிக்க முடியாது.

மக்களுக்கு எந்த வகையிலும் பயனற்ற, பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தக்கூடிய சாயப்பட்டறையுடன் கூடிய ஜவுளி பூங்காவை ஆலங்கோட்டை கிராமத்தில் அமைக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Embed widget