மேலும் அறிய

வட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் என்ன பாவப்பட்ட மக்களா? - அன்புமணி ராமதாஸ்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் திமுக கிளை செயலாளர்கள் மூலம் கணக்கெடுப்பு செய்யப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.

சென்னையில் வெள்ளம் வந்தால் 9-வது மாடியில் இருப்பவருக்கு கூட நிவாரணமாக  6000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் வட மாவட்டங்களில் வெள்ளம் வந்தால் 2000 ரூபாய் தான் வழங்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் திமுக கிளை செயலாளர்கள் மூலம் கணக்கெடுப்பு செய்யப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.

பாமக சார்பில் இலவச மருத்துவ முகாம்

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அதிகம் தண்ணீர் தேங்கி நின்ற  பகுதிகளில் நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாமக சார்பில் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து ஆலோசனைகளை வழங்கினார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசிய அவர்...

சாத்தனூர் அணையை திறக்கப் போகிறோம் என்பதை குறைந்தது 5 மணி நேரத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும். முன்கூட்டியே அறிவுறுத்தல் வழங்காததால் டிவி பைக் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சோதாரமாகியுள்ளது. இந்த சேதாரங்களுக்கு தமிழக அரசு தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சேதம் அடைந்துள்ள வீடுகளை பெருக்கி துடைப்பதற்கு கூட இந்த 2000 ரூபாய் போதாது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரேஷன் அட்டைக்கு 2000 ரூபாய் வழங்கியிருப்பது ஆணவமான செயல் என அன்புமணி காட்டமாக விமர்சனம் செய்தார். சேதம் அடைந்துள்ள வீடுகளை பெருக்கி துடைப்பதற்கு கூட இந்த 2000 ரூபாய் போதாது. அந்த வீட்டில் உள்ள பொருட்களுக்கு யார் நிவாரணம் கொடுப்பது என கேள்வி எழுப்பினார். சென்னையில் வெள்ளம் வந்தால் 9-வது மாடியில் இருப்பவர்களுக்கு கூட 6000 ரூபாய் கொடுக்கப்பட்டது. அதே போல தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோதும் அங்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் என்ன பாவப்பட்ட மக்களா?

ஆனால் கடலூர்,விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் தமிழக அரசு வெறும் 2000 ரூபாய் மட்டும் கொடுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் என்ன பாவப்பட்ட மக்களா? சென்னையில் இருப்பவர்கள் மட்டும் என்ன புண்ணியம் செய்தவர்களா? எங்கு வந்தாலும் வெள்ளம்.. வெள்ளம்.. தான் பாதிப்பு.. பாதிப்பு.. தான் வரும் வழியில் பார்த்தேன் விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு மண்மூடி போய் கிடக்கிறது.

சீர் செய்வதற்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் அறிவிக்கப்படவில்லை...

அவற்றை சீர் செய்வதற்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் அறிவிக்கப்படவில்லை. சில பகுதிகளில் திமுக கிளை செயலாளர்கள் மூலமாக வெள்ள பாதிப்புகள் தொடர்பாக கணக்கெடுக்கப்படுகிறது. ஏனென்றால் பணம் வந்தால் அவர்கள் மூலமாக கமிஷன் எடுத்துக் கொண்டு மீதி  கொடுப்பார்கள். செந்தில் பாலாஜி இந்திய சுதந்திரத்திற்காக போராடி விட்டு 400 நாள் சிறையில் இருந்து திரும்பி உள்ளார் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget