மேலும் அறிய

PMK: தூக்கு தண்டனை தொடர்பான குடியரசுத் தலைவரின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு கூடாதா? ராமதாஸ் கண்டனம்

PMK: இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மாற்றம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறித்தியுள்ளார்.

தூக்கு தண்டனை தொடர்பான குடியரசுத் தலைவரின்  முடிவை எதிர்த்து மேல்முறையீடு கூடாது என்பது மக்களின் உயிரிவாழும் உரிமையை பறிப்பதாக உள்ளது என குறிப்பிட்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மாற்றம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

புதிய சட்டத்திருத்தம்

குற்றவழக்குகளில் தூக்கு தண்டை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் எந்த முடிவை எடுத்தாலும் அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; குடியரசுத் தலைவரின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.  இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்திருத்த முன்வரைவின் 473-ம் பிரிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-ம் பிரிவின்படி ஒருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், இந்த சட்டத்திருத்ததின் படி, குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை முடிவில் குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானது. அதில் யாரும் தலையிட முடியாது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. 

பா.ம.க. நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:

” குற்றவழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின்  கருணை மனு மீது,  குடியரசுத் தலைவர் எந்த முடிவை எடுத்தாலும் அதை அனைவரும்  ஏற்றுக்கொள்ள வேண்டும்; குடியரசுத் தலைவரின் முடிவு குறித்து வினா எழுப்பக் கூடாது; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக இந்திய  குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்த முன்வரைவின்  473-ஆம் பிரிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு  விபரீதமானது. குற்றவழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் மனம் திருந்தி வாழ நினைப்பவர்களின் வாழ்வுரிமையக் பறிக்கும்  செயலாகும்.

குற்றவழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்கள் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-ஆம் பிரிவின்படி, ஒருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், இந்த அதிகாரத்தை பல தருணங்களில் குடியரசுத் தலைவர்கள் முறையாக பயன்படுத்துவதில்லை; பல்வேறு தருணங்களில் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதை பல ஆண்டுகள் தாமதப்படுத்தி விட்டு, இறுதியில் தண்டனையை உறுதி செய்கிறார்கள். சில நேரங்களில்  அரசியல் சூழலை பொறுத்தும் குடியரசுத் தலைவர்கள் முடிவெடுக்கின்றனர். அவர்களின் முடிவை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.

கருணை மனுக்கள் மீதான குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானது என்று புனிதப்படுத்துவதன் மூலம், குற்றவழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் வாழும் உரிமையை  மத்திய அரசு பறிக்க நினைக்கிறது. பல தருணங்களில் குடியரசுத் தலைவர்களால் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் போது அதை எதிர்த்து  செய்யப்படும் மேல்முறையீடுகளை போது, அதை கனிவுடன் பரிசீலிக்கும் உச்சநீதிமன்றம், தண்டிக்கப்பட்ட மனிதர்களின் தண்டனையை குறைத்தோ, ரத்து செய்தோ ஆணையிடுகின்றன. அண்மைக்காலங்களில் கூட , தூக்குமேடைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர்  உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் காப்பாற்றப்பட்டனர்.  இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் இத்தகைய வாய்ப்பு மக்களிடமிருந்து பறிக்கப்படக் கூடாது.

உலகில் கிட்டத்தட்ட 150 நாடுகளில் சாவுத்தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. இந்தியாவிலும் சாவுத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். சாவுத்தண்டனை ஒழிப்பை நோக்கி முன்னேற வேண்டிய நாம்,  தூக்குத் தண்டனையிலிருந்து குற்றவாளிகளை நீதிமன்றத்தின் மூலம் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகளை பறிப்பதை நோக்கி பின்னேறக் கூடாது.

தூக்கு தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுக்கள் மீது  குடியரசுத் தலைவர்கள் முடிவெடுப்பதில் ஏராளமான அரசியல் இருக்கும் நிலையில், அவர்களின் முடிவே இறுதியானதாக இருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம் தான் இருக்க வேண்டும். எனவே, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இது தொடர்பாக செய்யப்படவுள்ள திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget