மேலும் அறிய

Ramadoss: "கூட்டணி பற்றி முடிவு செய்ய நான் இருக்கேன்.. தூக்கி கடல்ல வீசிடுவேன்" ராமதாஸ் ஆவேசம்

தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்ய நான் இருக்கிறேன் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று ராமதாஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு, திருவிடந்தை அருகே நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பாக பேசினார். அப்போது, அவர் பேசியதாவது, 

உழைக்கத் தயார்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தம்பி உங்களை விட்டு யாரு இருக்கிறார்கள்? என்று கேட்டேன். நீங்கள் அனைவரும் மனது வைத்தால் ஒரு தொகுதியில் 2 ஆயிரம் இளைஞர்கள், இளம்பெண்கள். 50 தொகுதிகளில் சாதாரணமாக நாம் வெற்றி பெற முடியும். அது சாதாரண ஃபார்முலா. ஆனால், எனக்குத் தெரியும் பல பேர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். உழைப்பதில்லை. உழைக்காமல் வேறு எதையோ செய்து கொண்டிருக்கிறீர்கள். 

என் உழைப்பால், என் சிந்தையால் 95 ஆயிரம் கிராமங்களுக்கு என் பாதம் பட்டு இன்றும் நான் உறுதியாக திடமாக இருக்கிறேன். அவ்வளவு பலமாக இருக்கிறேன். உங்களுக்கு உழைக்க நான் தயாராக இருக்கிறேன். உங்களிடம் கேட்பது எல்லாம் ஒரே ஒரு ஓட்டு. ஆட்சி பீடத்தில் உட்காரலாம். நாம் எல்லாருக்கும் கொடுக்கலாம். 

வெட்கமாக இல்லையா?

இந்தியாவிலே  காலையிலே தூக்கத்திலே எழுந்தவுடன் உலகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைக்கிற ஒரே ஒரு மனிதன் ராமதாஸ் மட்டுமே ஆகும். இவ்வளவு நாள் என் பேச்சை மறந்தீர்கள்? யானைச் சின்னத்தில் தனியாக நின்று 4 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இன்று கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இது நமக்கு வெட்கமாக, அசிங்கமாக இல்லையா? கோபம் வரவில்லையா?

கணக்கை முடித்துவிடுவேன்:

நம்ம ஆளு நமக்கே ஓட்டு போடவில்லை. இனி அப்படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் உங்கள் ஒவ்வொருவரின் கணக்கையும் முடித்துவிடுவேன். அதற்கு அர்த்தம் என்னவென்றால் உங்கள் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. நல்ல பையனை குடிக்காத பையனை நீதான் மாவட்டம், எல்லாம்னு சொல்லுவேன். எம்.எல்.ஏ. என்றெல்லாம் பார்க்க மாட்டேன். தூக்கி கடல்ல வீசிடுவேன். 

கூட்டணி முடிவு:

உங்கள் கணக்கு பார்க்கப்படுகிறது. உங்களைப் பற்றிய கணக்கு எடுக்கப்படுகிறது. ஏமாத்திவிட்டு கோட்டைக்கு போவேன் என்றால் எங்கே கோட்டைக்கு போவது? உங்களை நம்பி தேர்தலில் இறங்கினால் அவ்வளவுதான். கூட்டணி பற்றி முடிவு செய்ய நான் இருக்கிறேன். நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். 

உனக்கு சீட் கிடைக்க வேண்டும், எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்றால் நீ நாளை முதலே உழை. உன் உழைப்பு கணக்கெடுக்கப்படுகிறது. இந்த கணக்கில் இருந்து தப்பிக்க முடியாது. காக்கா பிடித்தால் ஒன்றும் நடக்காது. ஆனா உனக்கு ஒன்னும் கிடைக்காது. இனிமேல் உழைக்க வேண்டும். என் தொகுதியை தக்க வைத்துக்கொள்வேன் என்றும். இதை மனதிலே வைத்துக்கொண்டு நீங்கள் செல்லுங்கள். இந்த சமுதாயம் வாழ 50 ஆண்டுகாலம் போராடுவேன். இனியும் போராடுவேன். 

ஏமாற்ற முடியாது:

இந்த ஊமை ஜனங்களுக்கு கோல் ஊன்றியாவது பாடுபட்டு உயிர் விடுவேன் என்று முழக்கமிட்டேன். அந்த கூட்டணி, இந்த கூட்டணி, கட்சிக்குள்ளே கூட்டணி. இதெல்லாம் நடக்காது தம்பி, இதெல்லாம் நடக்காது கண்ணு. என் கட்சியிலே பொறுப்புல இருக்கவே முடியாது. அது யாராக இருந்தாலும் சொல்கிறேன். உங்களுடைய நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது. உங்களை மாற்றுவதற்கு ஒருவன் வருவான். இந்த ராமதாஸ் நியமிப்பான். இனி எதுவும் நடக்காது. ஏமாற்ற முடியாது பொறுப்பாளர்களே. 

உழையுங்கள்:

எனக்கு அடுத்த மாசம் போன 87 வயசாகிறது. கிழவன் வயசானவன் என்று ஏமாற்றப் பார்க்காதீங்க. எனது பலத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் எனது கையைப் பிடித்துப் பாரு. இந்த கட்சி தனி மனிதனின் சொத்து அல்ல. என்னுடைய உழைப்பால் 40, 50 ஆண்டுகள் உழைத்ததால் கிடைத்தது. நாம் ஆள வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும். கோட்டையில் நின்று கத்தினால் நாம் ஆளுவோமா? நான் சொன்னதை கேட்டு கட்சிக்காக உழையுங்கள். உழைக்க முடியாதவர்களுக்கு நான் வேறு ஒருவரை நியமிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

தலைப்பு செய்திகள்

TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கோரிக்கை!
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கொந்தளிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
Embed widget