மேலும் அறிய

மாநிலங்களிடையே நதிநீர் சிக்கல் சட்டம்: கர்நாடக அரசின் சதிக்கு மத்திய அரசு ஏமாறக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

கர்நாடக முதலமைச்சரின் நோக்கம் பயனளிக்கக்கூடிய நீர்ப்பாசனத் திட்டங்களையோ, உட்கட்டமைப்பு திட்டங்களையோ விரைவுபடுத்துவது அல்ல - அன்புமணி ராமதாஸ்

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கர்நாடக முதல்வரின் யோசனையின் பின்னணியில் உள்ள தீய நோக்கங்களை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

"நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், பாசனம் சார்ந்த உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்கும் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டத்தின் சில பிரிவுகள் தடையாக இருப்பதாகவும், அவற்றை நீக்க வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். மேகதாது அணைக்கு கொல்லைப்புறமாக அனுமதி பெறுவதற்கான அவரது இந்த யோசனை கண்டிக்கத்தக்கது. 

மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில் காணொலியில் நடைபெற்ற பல்மாதிரி போக்குவரத்து கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை,‘‘ மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டம் நதிநீர் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பதிலாக புதிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகத் தான் உள்ளது. புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக மத்திய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி, வனத்துறை அனுமதி ஆகியவற்றை பெறுவதில் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. அதனால் திட்டச் செலவுகள் அதிகரிக்கின்றன. இத்தகைய அனுமதிகளை பெறுவதை எளிதாக்கும் வகையில் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டத்தை திருத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. அதை செய்தாக வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மாநிலங்களிடையே நதிநீர் சிக்கல் சட்டம்: கர்நாடக அரசின் சதிக்கு மத்திய அரசு ஏமாறக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

கர்நாடக முதலமைச்சரின் நோக்கம் பயனளிக்கக்கூடிய நீர்ப்பாசனத் திட்டங்களையோ, உட்கட்டமைப்பு திட்டங்களையோ விரைவுபடுத்துவது அல்ல. கர்நாடகத்தில் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் லாபம் பார்ப்பதற்காக மேகதாது அணை கட்டும் திட்டத்தில் ஏதேனும் முன்னேற்றத்தை எட்ட வேண்டும்; அதைக் கொண்டு அங்குள்ள காவிரி பாசன மாவட்டங்களில் வாக்கு வங்கியை அறுவடை செய்ய வேண்டும் என்பது தான். அதற்காகத் தான் நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதிலும், உட்கட்டமைப்புத் திட்டங்களையும் செயல்படுத்தத் துடிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார். கர்நாடக முதலமைச்சரின் இந்த நாடகத்தை நம்பி மத்திய அரசு ஒருபோதும் ஏமாந்து விடக் கூடாது.

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அதை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளின்  ஒருகட்டமாகத் தான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுள்ளன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதாலேயே ஒரு மாநிலத்தில் உருவாகும் ஆறு அந்த மாநிலத்திற்கு மட்டும் சொந்தமாகி விடாது. மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகள் மீது, அவை பாயும் அனைத்து மாநிலங்களுக்கும், குறிப்பாக கடைமடை மாநிலத்திற்கு உள்ள உரிமையை நிலைநாட்டுவதற்காகத் தான் 1956&ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. காவிரி உள்ளிட்ட மாநிலம் விட்டு மாநிலம் பாயும் ஆறுகள் மீதான தமிழகத்தின் உரிமை ஓரளவாவது பாதுகாக்கப்படுகிறது என்றால், அதற்கு முதன்மைக் காரணம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டம் தான்.

மாநிலங்களிடையே நதிநீர் சிக்கல் சட்டம்: கர்நாடக அரசின் சதிக்கு மத்திய அரசு ஏமாறக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

காவிரி ஆற்றில் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட தரக்கூடாது; வெள்ளம் ஏற்பட்டால் மட்டும் தமிழ்நாட்டை காவிரி ஆற்றின் வடிகாலாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் கர்நாடக அரசின் எண்ணம் ஆகும். அதன்படி இப்போது வரை தமிழ்நாட்டிற்கு காவிரியில் உபரி நீரை மட்டுமே  கர்நாடகம் திறந்து விட்டு வருகிறது. அவ்வாறு தமிழ்நாட்டிற்கு வரும் உபரி நீரையும் தடுப்பதற்காக கர்நாடகம் உருவாக்கிய திட்டம் தான் ரூ.9000 கோடியில் 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணையை கட்டும் திட்டம் ஆகும். மேகதாது அணையை கட்டவிடாமல் தடுப்பதற்கு தமிழக அரசுக்கு துணை நிற்பது மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டம், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை தான். தமிழகத்தின் இந்த பாதுகாப்பு அரண்களை தகர்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் தான் நதிநீர் சிக்கல் சட்டத்தை திருத்த வேண்டும் என்று பொம்மை வலியுறுத்தியுள்ளார்.

அணைகளை பாதுகாக்க வேண்டும் என்ற பொது நல நோக்கத்தை முன்வைத்து 50 ஆண்டுகளுக்கு முன்வைக்கப்பட்ட யோசனையின் பின்னணியை ஆராயாமல் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அணைகள் பாதுகாப்பு சட்டம் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட ஆறுகளில் தமிழகத்தின் உரிமையை பறித்துள்ளது.  அதேபோல், காவிரியிலும் தமிழகத்தின் உரிமையை பறிப்பதற்கான கர்நாடகத்தின் சதி தான் இந்த புதிய யோசனை ஆகும். அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டாலும் கூட, கர்நாடக முதலமைச்சரின் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது வியப்பும், வேதனையும் அளிக்கிறது.

மாநிலங்களிடையே நதிநீர் சிக்கல் சட்டம்: கர்நாடக அரசின் சதிக்கு மத்திய அரசு ஏமாறக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கர்நாடக முதல்வரின் யோசனையின் பின்னணியில் உள்ள தீய நோக்கங்களை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். 1956&ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டத்தை மத்திய அரசு வலுவிழக்கச் செய்து விடக் கூடாது. இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும். 

இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget