(Source: ECI/ABP News/ABP Majha)
PM Modi TN Visit: ''Go back Modi யா? இந்த முறை அவர் எங்கள் விருந்தினர்'' - பிரதமர் வருகை குறித்து விளக்கிய திமுக!
அரசியலில் அனைவருக்குமே எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் உண்டு. அப்படி பலரும் இயங்கும் சோஷியல் மீடியாக்களில் எதிர்ப்பு ஹேஷ்டேக்குகளும் ஆதரவு ஹேஷ்டேக்குகளும் வைரலாவது இயல்பானது
தலைவர்களின் வருகையை ட்விட்டர் ட்ரெண்டிங் மூலமே தெரிந்துகொள்ளலாம் என்ற நிலைதான் தற்போது. மாநில அரசோ, மத்திய அரசோ ட்விட்டரில் எல்லாம் ஒன்றுதான் என்ற அளவுக்கு ஹேஷ்டேக்குகள் தெறிக்கும். பிரதமர் தமிழகம் வந்தால் GobackModi ட்ரெண்டாகும். அதே ஹேஸ்டேக்குகளுக்கு இணையாக பிரதமரை வரவேற்றும் ஹேஷ்டெக்குகள் ட்ரெண்டாகும்.
சமீபத்தில் கோவை சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பாகவும் ஆதரவாகவும் கூட ட்விட்டரில் ஹேஸ்டேக் சண்டைகள் அரங்கேறின. அரசியலில் அனைவருக்குமே எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் உண்டு. அப்படி பலரும் இயங்கும் சோஷியல் மீடியாக்களில் எதிர்ப்பு ஹேஷ்டேக்குகளும் ஆதரவு ஹேஷ்டேக்குகளும் வைரலாவது இயல்பானது. ஆனால் பிரதமர் மோடிக்கு எதிரான ஹேஷ்டேக்குகளில் கடந்த அதிமுக ஆட்சியின் போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையாக பங்காற்றியது. திமுக கூட்டணி கட்சிகளும் கைகோத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. கறுப்பு பலூன்கள் பறந்தன.
திமுக தலைவர்கள் சிலர் வெளிப்படையாக ஹேஷ்டேக்குகளை பதிவு செய்தனர். மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதாகவும் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்துமே இந்த ஹேஷ்டேக்குகள் பதிவிட்டப்பட்டன. அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக பிரதமருக்கு எதிரான ஹேஷ்டேக்குகளை கடுமையாக எதிர்த்தது. இந்நிலையில் இன்று ஆளும் கட்சியாக கோட்டையில் திமுக உள்ளது. இந்நிலையில் ஜனவரி 12ம் தேதி தமிழ்நாடு வரவுள்ளார் பிரதமர் மோடி. மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க வருகைதரும் பிரதமரை இப்போது திமுக எப்படி கையாளும் என பலரும் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் விவாதமே கிளம்பியது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி விளக்கம் அளித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசிய அவர், "எதிர்க்கட்சியாக இருந்தபோது கறுப்புக் கொடி காட்டினோம். தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதால் அப்படி செய்தோம். இப்போது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதி அளித்துள்ளார். இப்போது நாங்கள் தான் அவரை அழைத்திருக்கிறோம். பிறகு எப்படி நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அவரை விருந்தினராக அழைத்திருக்கிறோம். பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி அல்ல. இந்துத்துவாதான் எதிரி . திமுக தன்மானத்தோடுதான் நடந்துகொள்கிறது” என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்