மேலும் அறிய

PM Modi Kerala Visit: திருவனந்தபுரத்தை மாற்றப்போகும் மோடியின் 'புளூ பிரிண்ட்'! கேரள சட்டமன்ற தேர்தலுக்கு அச்சாரமா?

விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் புத்திரிக்கண்டம் மைதானத்திற்குப் பிரதமர் மோடி கார் மூலம் 'ரோடு ஷோ' (Road Show) செல்கிறார்.

திருவனந்தபுரம்:  நாகர்கோவில்-மங்களூர், திருவனந்தபுரம்-தாம்பரம் மற்றும் திருவனந்தபுரம்-ஐதராபாத் ஆகிய வழித்தடங்களில் அதிநவீன 'அம்ரித் பாரத்' ரயில்களைக் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

அதிநவீன 'அம்ரித் பாரத்' ரயில் தொடக்கம்

தென் மாநிலங்களில் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்த பாரதிய ஜனதா கட்சி தீவிர முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாகத் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் அக்கட்சியின் தேசியத் தலைவர்கள் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி நாளை கேரளாவுக்கு வருகை தருகிறார்.

கேரள அரசியலில் பா.ஜ.க.வின் எழுச்சி

கேரள வரலாற்றில் முதன்முறையாக மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியை பா.ஜ.க. கைப்பற்றியது. அங்கு வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ்கோபி தற்போது மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க. தன்வசப்படுத்தியது அம்மாநில அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த உற்சாகத்துடன் வரும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க பா.ஜ.க. தயாராகி வருகிறது.

நாளை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்

நாளை டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட ரயில்வே விழாவில் பங்கேற்கிறார்.

புதிய ரயில் சேவைகள்: நாகர்கோவில் - மங்களூர், திருவனந்தபுரம் - தாம்பரம், திருவனந்தபுரம் - ஐதராபாத் ஆகிய வழித்தடங்களில் அதிநவீன 'அம்ரித் பாரத்' ரயில்களை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். மேலும், குருவாயூர் - திருச்சூர் இடையேயான பயணிகள் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.

மேம்பாட்டுத் திட்டங்கள்: புதுமை, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் மையத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேம்பாட்டு வரைபடத்தையும் வெளியிடுகிறார்.

பிரம்மாண்ட ரோடு ஷோ மற்றும் ஆலோசனை

விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் மைதானத்திற்குப் பிரதமர் மோடி கார் மூலம் 'ரோடு ஷோ' (Road Show) செல்கிறார். வழிநெடுகிலும் திரளும் பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் வரவேற்பைப் பெற்றுக்கொண்டே அவர் மைதானத்தை அடைகிறார். விழாவிற்குப் பின், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடும் அவர், பின்னர் அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள்

பிரதமரின் வருகையை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சங்குமுகம் விமான நிலையம் முதல் புத்திரிக்கண்டம் வரை தற்காலிகமாகச் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் ட்ரோன்கள், பலூன்கள் மற்றும் லேசர் விளக்குகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நகரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கேரளா வந்து சென்ற நிலையில், பிரதமரின் இந்த வருகை கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget