மேலும் அறிய

Arputhammal Interview: "31 ஆண்டுகால போராட்டத்தை அறிவீர்கள்.. என்ன பேசுவதென்றே தெரியவில்லை” - உணர்ச்சிப்பெருக்கில் அற்புதம்மாள்

பேரறிவாளனுக்கு விடுதலை அளிக்கப்பட்ட நிலையில், அவரது தாயார் அற்புதம்மாள் பேட்டி அளித்துள்ளார்.

பேரறிவாளனுக்கு விடுதலை அளிக்கப்பட்ட நிலையில்,  அவரது தாயார் அற்புதம்மாள் பேட்டி அளித்துள்ளார். 

இது குறித்து பேரறிவாளன் தாயார் பேசும்போது, “ நீண்ட நேரம் புறக்கணித்தற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. என்ன பேசுறது என்ன சொல்றது எனக்கு தெரியல.. எல்லாத்துக்கும் நன்றி சொல்லனும் அப்படிங்கிற ஆர்வத்துல நிக்கிறோம். பேரறிவாளனை பற்றி நான் எதுவும் சொல்லத்தேவையில்லை. எல்லாத்தையும்  நான் வெளிப்படையாகவே வைத்திருக்கிறேன். 31 ஆண்டு கால சிறை வாழ்கையை ஒரு நொடி நின்று யோசித்து பார்த்தால் உங்களுக்கு அந்த வலியும் வேதனையும் புரியும்.

பேரறிவாளனுக்கு இந்த அரசு தொடர்ந்து பரோல் கொடுத்தது. நீதிமன்றம் பெயில் கொடுத்தது. அதனால் அவனை நன்றாக பார்த்துக்கொள்ள முடிந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.. பேரறிவாளனின் விடுதலைக்கு  உதவிய முகம் தெரியாத எல்லாத்தலைவர்களுக்கு என்னுடைய நன்றி.” என்று பேசினார். 

விடுதலையானார் பேரறிவாளன் 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி  காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு பேரறிவாளன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுதாக்கல் செய்தார்.

தொடர்ந்து 9 மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது. அதனையடுத்து, பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், தமிழ்நாடு அரசின் சார்பில் ராகேஷ் துவிவேதி, மத்திய அரசு சார்பில்  கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ் ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை வைத்தனர்.

Arputhammal Interview:

விசாரணையின்போது, ``ஆளுநர், குடியரசுத் தலைவர் அதிகாரம் குறித்து விஷயங்களுக்குப் போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்து வைக்க ஒரே தீர்வு என கருதுகிறோம். விடுதலை செய்வதில் யாருக்கு அதிகாரம் என்ற குழப்பத்தில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்.

அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கே மிகப் பெரிய பாதகமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு எதிராகச் சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மேலும், மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது" என்று நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டு நடப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு செயல்படுங்கள் என்று ஆளுநருக்கு யாரும் அழுத்தம் தரமுடியாது இது மத்திய புலனாய்வு கையாண்ட விவகாரம். இதில் கருணை காட்ட வேண்டும் என்றாலோ முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலோ அது மத்திய அரசின் வசம் தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும் இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுப்பார். தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதன்படி தான் நடக்கும் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்தின் அடிபப்டையை அழிக்கும் வகையில் உள்ளது. பேரறிவாளன் மனுவை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்ப முடியாது; குடியரசுத் தலைவரை தொடர்புபடுத்தவும் முடியாது; தனக்கான கடமையை செய்யத் தவறியதோடு தேவையில்லாமல் குடியரசுத் தலைவரை இழுத்துவிட்டிருக்கிறார் ஆளுநர்; அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் தருவது ஆளுநரின் வேலை; அதை உடனே செய்யாமல் கிடப்பில் போட்டிருக்கிறார் ஆளுநர்; பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவை ஏற்காமல் மிகப்பெரிய அரசியல் பிழையை ஆளுநர் செய்துவிட்டார் என்று  அரசுத் தரப்பு வழக்கறிஞர் கடுமையான வாதங்களை எடுத்து வைத்திருந்தனர்.

Arputhammal Interview:

இறுதியாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு உத்தரவிட்டிருந்த நீதிபதிகள் தீர்ப்பினை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், இவ்வழக்கின் மீதான தீர்ப்பினை நீதிபதிகள் இன்று வழங்கினர்.

Arputhammal Interview:

நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த  பேரறிவாளன் விடுதலை விவகாரத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதன் காரணமாக ஜாமீனில் உள்ள அவரை தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி முழுமையாக விடுதலை செய்து நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான, போபண்ணா, கவாய் ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

தலைப்பு செய்திகள்

DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
தமிழ்நாடு அரசுப் பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனம் - விஜய் அரசுக்கு சீமான் கொடுத்த வார்னிங் என்ன?
தமிழ்நாடு அரசுப் பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனம் - விஜய் அரசுக்கு சீமான் கொடுத்த வார்னிங் என்ன?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
Embed widget