Palamedu Jallikattu: "சாதி பெயர்லாம் சொல்ல மாட்டோம்" பாலமேடு ஜல்லிக்கட்டில் அசத்திய விழா கமிட்டி!
பாலமேடு ஜல்லிக்கட்டில் நேற்று, காளைகள் அவிழ்க்கும்போது ஒரு குறிப்பிட்ட நபர் தனது பெயருக்கு பின்னால் ஜாதியின் பெயரை குறிப்பிடும்படி கூறியுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு படுதிகளில் நடைபெறும். அதன்படி, இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும் வெகு சிறப்பாக ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது. இந்தநிலையில், தற்போது உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் ஜாதிப்பெயரா..?
இந்தநிலையில், நேற்று மதுரையை அடுத்த பாலமேட்டில் வெகுவிமரிசையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நேற்று, காளைகள் அவிழ்க்கும்போது ஒரு குறிப்பிட்ட நபர் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் ஜாதியின் பெயரை குறிப்பிடுப்படி கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த விழா கமிட்டியாளர்கள், வெறும் பெயரை மட்டும் கூறுவோம். ஜாதி பெயரை எல்லாம் சொல்லமாட்டோம். தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுபடி இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. (வீடியோ: நன்றி சன் செய்திகள்..)
ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ஜாதி பெயர் தவிர்க்கப்பட்டிருப்க்கிறது பாலமேட்டில்.
— தோழர் சிவா ★ (@Sivaa_Comrade) January 16, 2024
நீதி மன்றத்திற்கும் தமிழ் நாடு அரசிற்கும் பாரட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். pic.twitter.com/ZBz9oDWrM3
முன்பே உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை:
மதுரை சேர்ந்த செல்வக்குமார் என்பது ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது சாதி, மத ரீதியாக நடத்தக்கூடாது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதி பெயரை தவிர்க்க வேண்டும். காளைகளை அவிழ்க்கும்போது அதன் உரிமையாளர்களின் பெயரோடி சாதி பெயர் குறிப்பிட கூடாது என தெரிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜல்லிக்கட்டு போட்டியின்போது சாதி பெயரை பயன்படுத்த கூடாது என்உம், காளைகளை அவிழ்க்கும்போது காளையின் உரிமையாளர் பெயரோடு சாதிப் பெயரை கூறக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
ஜாதிப்பெயரை பயன்படுத்தக்கூடாது என கடந்த 2019ம் ஆண்டிலேயே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், இதை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றாதநிலையில், இந்தாண்டு பின்பற்றியது பல பேரிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
என்ன நடந்தது பாலமேடு ஜல்லிக்கட்டில்..?
மாட்டுபொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிகட்டு போட்டியானது நேற்று காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. முதலில் கிராம காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டு பின்னர் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 840 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களமாடி 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்ற மாடுபிடி வீரருக்கு நிசான் கார் மற்றும் APACHE பைக் பரிசும், பரிசுகோப்பையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. 11 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் என்ற மாடுபிடி வீரருக்கு இரண்டாவது பரிசாக APACHE பைக் பரிசும் வழங்கப்பட்டது.
போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளையான புதுக்கோட்டை மாவட்டம் இராயவயல் சின்னக்கருப்பு மாட்டின் உரிமையாளருக்கு நிசான் கார் பரிசாகவும், 2 ஆம் இடத்தில் சிறப்பாக களம் கண்ட தேனி மாவட்டம் கோட்டூர் அமர்நாத் என்பவரது காளைக்கு பசுங்கன்றுடன் கூடிய நாட்டுபசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது.
இதேபோன்று போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களம் காணும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், மற்றும் சிறந்த காளைகளுக்கும் ,, குக்கர், எல்.இ.டி TV, , தங்ககாசு, கட்டில் மெத்தை, சைக்கிள், பீரோ போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட்டது.