AIADMK: ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கிய ஈபிஎஸ்.. ஈபிஎஸ்-ஐ நீக்கிய ஓபிஎஸ்.. மாறிமாறி நீக்கம்! குழப்பத்தில் அதிமுக!
அ.தி.மு.க. கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றம்.
அதிமுக கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார். நடைபெற்றுவரும் பொதுக்குழுக் கூட்டதில் கட்சியின் விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்க சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கட்சியின் பொருப்பாளர் என்று பதவி மட்டுமல்லாமல், கட்சியின் அடிப்படை உறுப்பினராகப்வும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சியின் உறுப்பினர்கள் யாரும், ஓ.பன்னீர்செல்வத்திடம் எவ்வித் தொடர்பும் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
#BREAKING | எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவிப்பு!https://t.co/wupaoCQKa2 | #OPSvsEPS #AIADMK #OPanneerselvam #EdappadiPalaniswami pic.twitter.com/h3C1GMjgtO
— ABP Nadu (@abpnadu) July 11, 2022
இதற்கிடையே நீக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், என்னை நீக்க ஈபிஎஸ்க்கு அதிகாரமில்லை என தெரிவித்த ஓபிஎஸ்,முனுசாமியையும், ஈபிஎஸையும் தான் கட்சியிலிருந்து நீக்குகிறேன் எனத் தெரிவித்தார்.
அதிமுக கட்சியின் சட்ட விதிகளின்படி, ஒன்றரை கோடி உறுப்பினர்களால் நான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னை கட்சியில் இருந்து நீக்க, எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி. முனுசாமிக்கோ அதிகாரமில்லை.
#BREAKING | ஓ.பி.எஸ்-ஐ நீக்கிய இ.பி.எஸ் - இ.பி.எஸ்-ஐ நீக்கிய ஓ.பி.எஸ்!https://t.co/wupaoCQKa2 | #OPSvsEPS #AIADMK #OPanneerselvam #EdappadiPalaniswami @OfficeOfOPS @EPSTamilNadu pic.twitter.com/IM5fDmlPJ2
— ABP Nadu (@abpnadu) July 11, 2022
அப்படியிருக்க, கட்சியின் சட்ட விதிகளுக்கு புறமாக தன்னிச்சையாக செயல்பட்டதற்கு கண்டன் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இன்று அறிவிக்கிறேன். எடப்பாடி பழனிசாமி அவர்களையும் மற்றும் முனுசாமி அவர்களையிம் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குகிறேன்.
#BREAKING | வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கம்https://t.co/wupaoCQKa2 | #OPSvsEPS #AIADMK #OPanneerselvam #EdappadiPalaniswami
— ABP Nadu (@abpnadu) July 11, 2022
இந்தச் செயலுக்கு தொண்டர்களுடன் இணைந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். உரிய நீதியை பெறுவோம். என்று ஓ.பி.எஸ். கூறினார்.
மேலும், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மாறிமாறி கட்சியில் இருந்து நீக்கிக்கொண்டதால் என்ன நடக்கிறது என தெரியாமல் அதிமுகவினர் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண,
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்