பலத்த காற்றால் விழுந்த மரம்... ஊட்டிக்கு சுற்றுலா வந்த இடத்தில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
கோடை விடுமுறைக்காக பெற்றோருடன் சுற்றுலா வந்த சிறுவன் மரம் விழுந்து உயிரிழந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஊட்டியில் விடாமல் பெய்து வரும் கனமழையினால் மரம் முறிந்து விழுந்ததில் கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
தென் மேற்கு பருவமழை:
வெயில் காலம் முடிந்து தற்போது நாடு முழுவதும் பருவமழை துவங்கியுள்ளது, அந்தமானில் கடந்த 13 ஆம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில் நேற்று கேரளாவில் தென் மேற்கு தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்தது.
வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்பாகவே தொடங்கி இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது.
ரெட் அலர்ட்:
அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கோவை மற்றும் உதகையில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று காலையில் இருந்து உதகையில் கனமழையானது பெய்து வந்தது.
சிறுவன் உயிரிழப்பு:
இந்த நிலையில் கேரள மாநில கள்ளிக்கோட்டையை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆதிதேவ் தனது பெற்றோருடன் பைன் காடுகள் பகுதியை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது 7 ஆம் மைல் பகுதியில் திடீரென வீசிய பலத்த காற்றின் காரணமாக மரம் முறிந்து சிறுவனின் மீது விழுந்தது. மரம் விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் ஆதிதேவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோடை விடுமுறைக்காக பெற்றோருடன் சுற்றுலா வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
மூடுப்படும் சுற்றுலா தலங்கள்:
உதகையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது, இந்த நிலையில் நாளையும் உதகைக்கு ரெட் அலர்ட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை உதகை முழுவதும் உள்ள சுற்றுலா தளங்கள் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சுற்றுலாவுக்கு வந்துள்ள பயணிகளும் பாதுக்காப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






















