டிப்பர் லாரி - ஈச்சர் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதல் - டிரைவர் உடல் நசுங்கி உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி ஈச்சர் சரக்கு வாகனத்தில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார்.
குளித்தலை அருகே தேவதானத்தில் தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி - ஈச்சர் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இடத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் பரமத்தி வேலூரில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி ஈச்சர் சரக்கு வாகனத்தில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார். அதிகாலை குளித்தலை அருகே தேவதானம் என்ற இடத்தில் வந்த போது எதிரே திருச்சியில் ஜல்லி லோடு இறக்கி விட்டு கரூர் நோக்கி குளித்தலை அருகே கீழ வெளியூரை சேர்ந்த தங்கவேல் என்பவர் ஒட்டி வந்த டிப்பர் லாரியும், ஈச்சர் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது.
இதில் ஈச்சர் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் அரவிந்த் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த டிப்பர் லாரியின் டிரைவர் தங்கவேல் மற்றும் லாரியில் உடன் வந்த உரிமையாளர் தமிழழகன் ஆகிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் ஈச்சர் சரக்கு வாகனத்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்து இருந்ததால் அரவிந்தனின் உடலை மீட்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. சரக்கு வாகனத்தின் சேதம் அடைந்த முன் பகுதி முழுவதையும் அகற்றிய பின் அரவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தினால் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சிறுமி பலாத்காரம் சித்தப்பா உட்பட மூவர் கைது.
கரூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செய்த சித்தப்பா உள்பட மூவரை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி சித்தி வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஜூன் மாதம் செங்குளம், கோட்ட கரையான் பட்டியைச் சேர்ந்த ஆடுமேய்க்கும் தொழிலாளி பெரியசாமி அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இந்த சிறுமியின் சித்தப்பா இடும்பனுக்கு தெரிய வந்ததும் முதியவரை கண்டித்துள்ளார். அதன் பிறகு இடும்பனும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதே பகுதியில் பேக்கரியில் வேலை செய்து வரும் சஞ்சீவி 20 அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து, கரூர் சைல்டு லைனுக்கு புகார் வந்தது. அதை தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், சிறுமியிடம் விசாரித்தார். இந்த சம்பவம் குறித்து குளித்தலை மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தகாத செயலில் ஈடுபட்ட பெரியசாமி, இடும்பன், சஞ்சீவி, ஆகியோர் மீது போக்சோ வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தார். பின்னர், அவர்களை, கரூர் மகிளா கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.