Omni Bus Ticket : இது பஸ் கட்டணமா..? இல்ல விமான கட்டணமா..? அதிர்ச்சியில் உறைய வைத்த ஆம்னி பேருந்து கட்டணங்கள்..!
பண்டிகை காலங்களுக்கான ஆம்னி பேருந்து கட்டணங்கள் விமான கட்டண அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகள் பண்டிகைக் காலங்களில் கடுமையாக விலையை உயர்த்தி கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், முன்னதாக அரசின் அனுமதியுடன் ஆம்னி பேருந்துகள் சங்கம் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக உயர்த்தப்பட்ட கட்டணமோ விமானக் கட்டணத்துக்கு இணையாக இருப்பதால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.
புதிதாக உயர்த்தப்பட்ட கட்டண விவரங்கள் பின்வருமாறு:
சென்னை-கோவை: குறைத்தபட்சம் ரூ1,815 முதல் அதிகபட்சம் 3,025
சென்னை-மதுரை: குறைந்தபட்சம் ரூ1,776 முதல் அதிகபட்சம் 2,688
சென்னை-சேலம்: குறைந்தபட்சம் ரூ1,435 முதல் அதிகபட்சம் 2,109
சென்னை - பழனி குறைந்தபட்சம் ரூ1,650 முதல் அதிகபட்சம் 2,750 சென்னை - தென்காசி குறைந்த பட்சம் ரூ 2,079 முதல் அதிகபட்சம் 3,465
சென்னை - திருநெல்வேலி குறைந்த பட்சம் ரூ 2,063 முதல் அதிகபட்சம் 3,437 சென்னை - திருப்பூர் குறைந்த பட்சம் ரூ 1,667 முதல் அதிகபட்சம் 2,777
சென்னை - நாகப்பட்டினம் குறைந்த பட்சம் ரூ 1,271 முதல் அதிகபட்சம் 1,767
சென்னை - திருச்சி குறைந்த பட்சம் ரூ 1,394 முதல் அதிகபட்சம் 1,938
சென்னை - உடன்குடி குறைந்த பட்சம் ரூ 2,211 முதல் அதிகபட்சம் 3,630
சென்னை - திருச்செந்தூர் குறைந்த பட்சம் ரூ 2,112 முதல் அதிகபட்சம் 3,520
சென்னை -ஆறுமுகநேரி குறைந்த பட்சம் ரூ 2,079 முதல் அதிகபட்சம் 3,465 சென்னை-ஆத்தூர் குறைந்த பட்சம் ரூ.2063 முதல் அதிகபட்சம் 3,437
சென்னை -தூத்துக்குடி குறைந்த பட்சம் ரூ 2013 முதல் அதிகபட்சம் 3355 சென்னை -தென்காசி குறைந்த பட்சம் ரூ.2,079 முதல் அதிகபட்சம் 3,465 ரூபாயாகவும் உள்ளது.
முன்னதாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, பேருந்து உரிமையாளர்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், துறைசார்ந்த பல்வேறு அதிகாரிகளும் கலந்துகொண்ட நிலையில், முன்னதாக விலை குறையும் எனப் பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
#Banprivateomnibus,
— Manojkumar (@Manojkumar_m_) October 1, 2022
It too cost of all kind of people's... It's not affordable price for every one... Ban private omni bus.... pic.twitter.com/dS0OkV6mhl
ஆனால் விண்ணை முட்டும் அளவுக்கு தற்போது கட்டணம் உயர்ந்துள்ளதால், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை மக்கள் முன்வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Crime: மேஸ்திரியின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்... உடற்கூராய்வில் வெளிச்சத்துக்கு வந்த கொலை