Tasmac Sales: அக்.2 காந்தி ஜெயந்தி; அக். 1ல் டாஸ்மாக்கில் குவிந்த மதுப்பிரியர்கள்; இவ்வளவு விற்பனையா.!
Tamil Nadu Tasmac sales: நேற்று காந்தி ஜெயந்தி காரணமாக டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்டதால், அக்டோபர் 1 ஆம் தேதி டாஸ்மாக் விற்பனையானது அதிகரித்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் டாஸ்மாக் (TASMAC) கடையில் ரூ. 220 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
டாஸ்மாக் விடுமுறை:
காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதியானது காந்தி ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் அரசு விடுமுறையும் அளிக்கப்படுகிறது. மேலும் , இந்த தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறைகள் அளிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.
மது விற்பனை:
இதனால், மது அருந்துபவர்கள் , நேற்றைய தினம் விடுமுறை என்பதன் காரணமாக நேற்று முன் தினமே மதுவை வாங்கி வைத்தனர். இதனால், அக்டோபர் 1 ஆம் தேதி மது விற்பனை அதிகரித்தது. இந்நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதியன்று மட்டுமே ரூ.220 கோடி மது விற்பனையாகி உள்ளது என தகவல் தெரிவிக்கின்றன.
பொதுவாக , ஒரு நாளில் ரூ.120 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் நிலையில், ரூ. 220 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: "உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளது குடும்ப வாரிசு அரசியல் அல்ல" - கொளத்தூர் மணி