Jayalalithaa: சூடுபிடிக்கும் ஜெயலலிதா மரண வழக்கு.. நாளை ஆஜராகும் ஓபிஎஸ்.! தீவிரம் காட்டும் ஆறுமுகசாமி!
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராகிறார்.
நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராகிறார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக சில கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இது ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட பலரையும் விசாரித்தது. எனினும் தற்போது வரை இந்த ஆணையம் விசாரணையை முடிக்கவில்லை. இந்த ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு கொண்டு வந்தது.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் கடந்த வாரம் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. இதுவரை 154-க்கும் மேற்பட்டோர் இந்த விசாரணையில் ஆஜராகி பதிலளித்துள்ளனர். அடுத்ததாக, எய்மஸ் பரிந்துரைத்த மருத்துவர்கள் குழு காணொளி வாயிலாக பங்கேற்பார்கள் என தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த 12ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. பல முறை ஆணையம் ஓபிஎஸ்க்கு சம்மன் அனுப்பியும் அவர் ஒரு முறை கூட நேரில் ஆஜராகமல் இருந்தார்.
இந்த நிலையில், நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராகிறார். இதேபோல், சசிகலா அண்ணன் மனைவி இளவரசிக்கும் சம்மன் அனுப்பபட்டது. அவரும் நாளை ஆஜராக உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
#BREAKING
— ABP Nadu (@abpnadu) March 20, 2022
நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நாளை ஆஜராகிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம்#OPanneerselvam #jayalalitha #Arumugasamycommission pic.twitter.com/gITB3D2EER
முதல்முறையாக ஓ.பன்னீர்செல்வத்திடம் நாளை விசாரணை நடைபெறும் பட்சத்தில், பல தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்