கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அரசு மருத்துவர்கள் பொதுப்பிரிவு சேர்க்கையில் பங்கேற்க அனுமதித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
கிராமங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்கள் சேர்க்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் விட கூடுதலாக வழங்குவதால், தனியார் மருத்துவமனையில் படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோவதாக அரசுசாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் 50% பொது ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள் 30% வெயிட்டேஜ் மதிபெண்களுடன் பங்குபெறலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு மருத்துவர்கள் பொதுப்பிரிவு சேர்க்கையில் பங்கேற்க அனுமதித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது, கிராமப்புறங்களில், அணுக முடியாத பகுதிகளில் அரசு மருத்துவர்கள், பணிபுரிவதால் மக்கள் பயன்பெறுகின்றனர் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்