நீலகிரி: நாளை மின் தடை! முக்கிய பகுதிகள் பாதிப்பு! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்!
நீலகிரி மாவட்டத்தில் நாளை (15.12.2025) திங்கட்கிழமை பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.
மின் தடை பகுதிகள்
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நாளை (15.12.2025) திங்கட்கிழமை பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உப்பட்டி, சேரம்பாடி, கூடலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அன்று இந்த துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதன்படி உப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உப்பட்டி, பொன்னானி, தேவாலா, பந்தலூர், அத்திக்குன்னா, கொளப்பள்ளி, எல்லமாலா, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், அய்யன்கொல்லி, வுட் ப்ரேயர் நம்பர் 3 டிவிசன் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
சேரம்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சேரம்பாடி நகரம், கன்னம்வயல், நாயக்கன் சோலை, கையுண்ணி, எருமாடு, தாளூர், பொன்னச்சேரர், கக்குண்டி, சோலாடி, கூடலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1-வது மைல், 2-வது மைல், காந்திநகர், முதுமலை, அத்திப்பள்ளி, தொரப்பள்ளி, பாடான்துரை, ஸ்ரீ மதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கார்குடி, தேவர்சோலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.





















