நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்! எப்படி பெறுவது? எதனால்? யாருக்கு தேவையில்லை?
Nilgiris E Pass: நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் இ-பாஸ் நடைமுறையானது கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்திப்பெற்ற தலமான நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, நாளை முதல் இ-பாஸ் நடைமுறையானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதற்கு இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது, எத்தனை நாள் இ-பாஸ் நடைமுறை கட்டாயம் , எப்படி இ-பாஸ் பெறுவது குறித்து தகவலானது, இங்கே தெரிவிக்கப்படுகிறது.
நீலகிரி :
நீலகிரியானது கடல் மட்டத்திலிருந்து, 900 மீட்டர் முதல் 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஆனது வடக்கே கர்நாடகா மாநிலமும், கிழக்கே கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டமும், தெற்கே கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் கேரளா மாநிலமும், மேற்கே கேரளா மாநிலமும் எல்லைகளாக கொண்டுள்ளது. நீலகிரியின் இயற்கை அழகு மற்றும் குளிர்ச்சியான வானிலையின் காரணமாக பலரை ஈர்க்கும் இடமாக இருக்கிறது. நீலகிரி என்பது நீல மலை என பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது நீல – நீலம் என்றும் கிரி – மலை என்று பொருள். இந்த பெயரைப் பற்றி முதல் குறிப்பு, சங்க கால இலக்கியமான சிலப்பதிகாரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் நீலகிரிக்கு இ-பாஸ்?
கோடை காலத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படும்போது, பலரும் வெயிலை தணிக்கவும், சுற்றுலா செல்லும் இடங்களில் ஒன்றாக நீலகிரி இருக்கிறது. இதனால், கோடை காலத்தில் மக்கள் கூட்டம் அதிகமாவதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், உள்ளூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதுமட்டுமன்றி, சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடுகிறது. இதையடுத்து, கோடை காலமான சுற்றுலா சமயத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே செல்லும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறையை நடைமுறையை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது, நாளை முதல் ( ஏப்ரல் 1 முதல் ) அமலுக்கு வருகிறது. பயணிகள் தங்களது செல்லிடப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம், மேலும் ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் போதுமானது என கூறப்படுகிறது. இந்த நடைமுறைகளானது வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
Also Read: Optical Illusion: சிங்கம் மறைந்திருக்கிறது...30 வினாடிகளில் கண்டுபிடித்தால், நீங்க மாஸ்தான்!
இ பாஸ் எப்படி பெறுவது?
இ-பாஸ் நடைமுறை அமலாக்கப்பட்டுவதை தொடர்ந்து, வெளி மாவட்ட, வெளி மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறையானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட பதிவு எண் TN 43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு E பாஸ் தேவையில்லை. இந்நிலையில், இ-பாஸ் பெறுவதற்கு https://epass.tnega.org/home என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம். பயணிகள் தங்களது செல்லிடப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம், மேலும் ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் போதுமானது. இதில் , உள்நாட்டு பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஆகியோர் தனித்தனியாக விண்ணப்பிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Also Read: நல்லா இருக்கே! கிப்லி படத்தில் ஸ்டாலின், விஜய்...ChatGPT, Grok AI மூலம் எப்படி உருவாக்குவது?
இ பாஸ்-க்கு எதிர்ப்பு:
இந்த தருணத்தில், இ-பாஸ் நடைமுறையானது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, ரத்து செய்யக்கோரியும் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் வருகை குறையும் என்றும் இதனால் வியாபாரம் குறையும் என்றும் அங்குள்ள வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதை உடனடியாக ரத்து செய்யவில்லையென்றால், பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தப் போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

