மேலும் அறிய

TN Rain Alert: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நீலகிரியில் கனமழை எச்சரிக்கை.. சென்னைக்கு எப்படி?

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 4 மற்றும் 5 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (01-01-2024) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி  வடக்கு திசையில் நகர்ந்து இன்று (02-01-2024), தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.   இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  இலங்கைக்கு தெற்கே  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்றும் நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  

அதேபோல் டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  காக்காச்சி (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்:

02.01.2024 முதல் 06.01.2024 வரை: குமரிக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள் :

02.01.2024 மற்றும் 03.01.2024: இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

02.01.2024: லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

03.01.2024 மற்றும் 04.01.2024:  லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

05.01.2024: மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும்  லட்சத்தீவு பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

06.01.2024: மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vignesh Sivan Nayanthara at Thiruchendur Temple | திருச்செந்தூரில் நயன் - விக்கி குஷியான ரசிகர்கள்Muttukadu Boat House : முட்டுக்காடு SUMMER SPECIAL 1 DAY PLAN-க்கு ரெடியா? இவ்வளவு OFFER இருக்கா?Suchitra interview  : ”ஐஸ்வர்யா நல்ல அம்மாவா? என் சப்போர்ட் தனுஷூக்கு தான்” பகீர் கிளப்பிய சுச்சிGV Prakash Saindhavi Divorce : ”ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்”  எமோஷனலான GV, சைந்தவி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Cow Theft:
"பீப் கடைக்கு " மாடுகளை திருடிய பார்ட் டைம் திருடர்கள் ..! ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ் ..!
Embed widget