மேலும் அறிய

Kodanadu case: கோடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது? எஸ்டேட் மேலாளரிடம் நீலகிரி காவல் துறையினர் விசாரணை..!

கொலை, கொள்ளை சம்பவம் நடந்த நாளான்று என்ன நடந்தது?, என்னென்ன பொருட்கள் திருடப்பட்டது? உள்ளிட்டவை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் ஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன் , உதயகுமார் , சம்சிர் அலி, தீபு ,சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் நீலகிரி மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்காக ஆஜரானர். அவரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை, கொள்ளை சம்பவம் நடந்த நாளான்று என்ன நடந்தது?, என்னென்ன பொருட்கள் திருடப்பட்டது? உள்ளிட்டவை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கோடநாடு வழக்கில் தொடர்புடைய 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அதேபோல கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கனகராஜின் நண்பரும், முக்கிய குற்றவாளியான சயன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே குடும்பத்துடன் செல்லும் போது கார் விபத்தில் சிக்கினார். அதில் சயனின் மனைவி மற்றும் மகள் இருவரும் உயிரிழந்தனர்.


Kodanadu case: கோடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது? எஸ்டேட் மேலாளரிடம் நீலகிரி காவல் துறையினர் விசாரணை..!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பு இருப்பதாக முக்கிய குற்றவாளியான சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் ஆகியோர்  கூறியிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்த நீலகிரி காவல் துறையினர், கூடுதல் விசாரணையை தீவிரப்படுத்தினர். பின்னர் சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜ் அண்ணன் தனபாலிடம் கூடுதல் விசாரணை செய்தனர்.

இதனிடையே கோடநாடு வழக்கில் சாட்சிய விசாரணையில் விடுபட்ட தடவியல் நிபுணர் ராஜாகோபால், கோத்தகிரி மின்வாரிய பொறியாளர் மற்றும் கோடநாடு பங்களா மேலாளர் நடராஜன் ஆகியோரை செப்டம்பர் 2 ம் தேதி முதல் விசாரிக்க நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. நேற்று வழக்கு விசாரணைக்காக வந்த போது மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவல் துறையினர் சம்மன் அனுப்பததால், மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராஜவில்லை. காவல் துறையினரின் கூடுதல் விசாரணைக்கு 4 வார கால அவகாசம் அளித்து நீதிபதி சஞ்சய் பாபா, அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தலைப்பு செய்திகள்

சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரிக்கு படகுப் போக்குவரத்து! - வெளியான மெகா பிளான்!
சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரிக்கு படகுப் போக்குவரத்து! - வெளியான மெகா பிளான்!
குரங்கை பிடித்து சித்ரவதை செய்த 3 பேர்... அதிரடி நடவடிக்கை எடுத்த பெரம்பலூர் வனத்துறை
குரங்கை பிடித்து சித்ரவதை செய்த 3 பேர்... அதிரடி நடவடிக்கை எடுத்த பெரம்பலூர் வனத்துறை
கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
டிராஃபிக் பிரச்சனைக்கு குட் பை! சென்னையில் புதிதாக வரப்போகும் மாற்றம்... GCC போட்ட முக்கிய பிளான்!
டிராஃபிக் பிரச்சனைக்கு குட் பை! சென்னையில் புதிதாக வரப்போகும் மாற்றம்! GCC முக்கிய பிளான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget