Weather Report : வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி...!
தென்மேற்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.
வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், புதுக்கோட்டை மற்றும் அதையொட்டிய உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று மிதமான மழை பெய்தது. இன்று முதல் வரும் 19-ந் தேதி வரை தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடனே காணப்படும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகிறது. இதன்காரணமாக, நாளை முதல் 19-ந் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பூமத்திய ரேகை பகுதியில் சூறாவளிக்காற்று 40 முதல் 50 மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இன்று மற்றும் 19 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதி மற்றும் இலங்கைக்கு தெற்கே பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த நவம்பர் 3-ந் தேதி முதல் கடந்த மாத இறுதி வரை தொடர்ந்து கனமழை பெய்தது. சென்னையில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த மாதம் ஒரே நாளில் 20 செ.மீ. மழை பெய்து அதிகனமழையாக பதிவானது. இதனால், சென்னையின் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், கே.கே.நகர், வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், கோயம்பேடு, அமைந்தகரை, வியாசர்பாடி, ராயப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியது.
இந்த நிலையில், மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாகியிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாவத் புயல் ஒடிசா பக்கம் திரும்பியதால் தமிழ்நாடு பெருத்த சேதத்தில் இருந்து தப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Headlines Today, 16 Dec: தமிழ்நாட்டில் ஒமிக்ரான்... வாய் திறந்த கோலி.. தங்கமணி வீட்டில் ரெய்டு... இன்னும் பல!
மேலும் படிக்க : ஜோஸ் ஆலுக்காஸில் 35 கிலோ தங்கம் கொள்ளை: சிசிடிவி இல்லாதது விசாரணைக்கு சற்று பின்னடைவு என எஸ்.பி பேட்டி
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்