மேலும் அறிய

EWS இட ஒதுக்கீடு.. ஸ்டாலின் தடுத்ததாக சொன்ன ஆ.ராசா.. ஆனால் உண்மையே வேறு!

உண்மையில் EWS இடஒதுக்கீடு 2019ம் ஆண்டு அமலுக்கு வந்தபோது அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது அதிமுக தான். பாஜகவுடன் இணக்கமாக இருந்தாலும் அந்த இட ஒதுக்கீட்டை அதிமுக தமிழ்நாட்டில் அமல்படுத்தவில்லை.

EWS இடஒதுக்கீடு சட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் தடுத்து விட்டதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்ததற்கு நெட்டிசன்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். 

69 சதவிகித இடஒதுக்கீடு

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடானது பின்பற்றப்படுகிறது. 31 சதவிகித இடங்கள் பொதுப்பிரிவினருக்கும், மீதமுள்ள 69 சதவிகித இட ஒதுக்கீடு மற்ற சமூக மக்களுக்கும் ஏற்றவாறு பிரிக்கப்பட்டுள்ளது. இதனை 1994 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கொண்டு வந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 50 சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 69 சதவிகிதமாக உயர்த்தி சட்டமன்றத்தில் சட்டமியற்றி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. 

EWS இடஒதுக்கீடு

இந்த சூழலில் கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு EWS இடஒதுக்கீடு என்ற சட்டத்தை இயற்றி நடைமுறைக்கு கொண்டு வந்தது. முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் EWS இட ஒதுக்கீடு 10 சதவிகிதமாக உள்ளது. 103வது இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி இந்த முறை அமல்படுத்தப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டைப் பெற்ற முற்பட்ட வகுப்பினரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் இருக்கக்கூடாது என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. 

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தடுத்தாரா?

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், “EWS இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வரவிடாமல் ஸ்டாலின் தடுத்ததாகவும், சட்டத்தை மீறினால் ஆட்சியைக் கலைக்கலாம் என்று விதி உள்ளது. நாங்கள் மீறியிருக்கிறோம்” என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்தார். அவ்வளவு தான். திமுக இந்த விவகாரத்தில் உண்மையை திரித்து கூறுவதாக நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: விசிகவை ஆபாசமாக பேசிய ஆ.ராசா.. பாசத்தில் பேசி விட்டதாக விளக்கம்.. குவியும் கண்டனம்!

உண்மையில் EWS இடஒதுக்கீடு 2019ம் ஆண்டு அமலுக்கு வந்தபோது அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது அதிமுக தான். பாஜகவுடன் இணக்கமாக இருந்தாலும் அந்த இட ஒதுக்கீட்டை அதிமுக தமிழ்நாட்டில் அமல்படுத்தவில்லை. 2021ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்தவுடன் திமுகவும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. 

அதேசமயம் வழக்கு ஒன்றில் EWS இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது தான் எனவும் அது செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இந்த இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்த முடியாது என உறுதியாக இருந்தார். இதுதொடர்பாக மறுசீராய்வு மனுவையும் திமுக தாக்கல் செய்தது. அந்த மனுவை 2023ம் ஆண்டு உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்து EWS இட ஒதுக்கீடு  செல்லும் என அறிவித்தது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாடு மட்டும் தான் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை. 

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மத்திய அரசு EWS இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரும்போதே அதனை மாநில அரசுகள் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கவில்லை. அது மாநில அரசுகளின் முடிவு சார்ந்த விஷயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டப்போராட்டம் நடத்தினோம், ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என சொல்லலாம். அதை விட்டு விட்டு ஏதோ திமுக தான் EWS இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் வரவிடாமல் தடுத்து விட்டதாக சொல்வதெல்லாம் என்ன வகை நியாயம் என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget