மேலும் அறிய

விசிகவை ஆபாசமாக பேசிய ஆ.ராசா.. பாசத்தில் பேசி விட்டதாக விளக்கம்.. குவியும் கண்டனம்!

எக்காலத்திலும் கூட்டணியை விட்டு போக மாட்டார்கள் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது திமுக நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால் அவர்கள் கூட்டணி மாறியதை ஆ.ராசா சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

சகோதர முரண்பாடு காரணமாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியை விமர்சித்ததாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா விளக்கமளித்தார். 

தவெக அமைச்சரவையில் விசிக

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் அமைச்சரவையில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றது. காங்கிரஸ் முதல் ஆளாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் மற்ற இரு கட்சிகளும் கடைசி நேரத்தில் தான் அமைச்சரவையில் இடம்பெற சம்மதம் தெரிவித்தது. திமுக கூட்டணி தேர்தலுக்குப் பின் சிதைந்துள்ளது. 

இந்த சூழலில் எக்காலத்திலும் கூட்டணியை விட்டு போக மாட்டார்கள் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது திமுக நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால் அவர்கள் கூட்டணி மாறியது திமுக தலைமையை கடுமையான அதிருப்தியில் ஆழ்த்தியது. 

Also Read: Thirumavalavan: விஜய் அமைச்சரவையில் விசிக.. விசில் சத்தத்திற்கு முட்டு.. திருமாவளவனை சாடிய ஆ.ராசா!

ஆ.ராசாவின் சர்ச்சை பதிவு

இந்த நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, இவ்விரு கட்சிகளும் திமுகவை விட்டு வெளியேறியதை சரமாரியாக சாடினார். அவர் தனது பதிவில், “முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’, மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’, வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி, புணர்ச்சிக்கு வேறிடம்  தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம் ;  என்றாலும்  களமாடுவோம் ! வெற்றி நமக்கே!!” என தெரிவித்திருந்தார். பெண்களை இழிவுப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்திய ஆ.ராசாவுக்கு கடும் கண்டனம் குவிந்த நிலையில் அதனை நீக்கி விட்டு வேறொரு பதிவை வெளியிட்டார். 

திருமாவளவனின் வருத்தம் 

இந்த நிலையில் தொண்டர்களிடையே பேசிய திருமாவளவன், “காங்கிரஸ் கட்சியும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. அப்போதெல்லாம் எதுவும் சொல்லாத திமுக, விசிக வெளியேறியவுடன் கடுமையாக விமர்சிக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக ஆ.ராசா பேசியது மனது வலிக்கிறது என தனது ஆதங்கத்தை கொட்டியிருந்தார். 

இதுதொடர்பாக விளக்கம் கொடுத்த ஆ.ராசா, “நாங்கள் விசிகவை விமர்சிப்பதற்கு காரணம் எங்களுக்குள் இருக்கும் பிணைப்பு தான். பாசம் யாரிடம் அதிகமாக உள்ளதோ, அங்கு பிணைப்பு முரண்படும்போது கோபம் வரும். கருத்தியல் ரீதியாக பார்க்கும்போது நாங்கள் காங்கிரஸ் மேல் அதிகமாக பாசம் வைக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியேறினார்கள். அதனால் எங்களுக்கு வருத்தம் இருக்கிறது. 

அன்றைக்கு கோபம் இருந்ததால் நாங்களும் பேசியிருப்போம். அவர்களும் பேசியிருப்பார்கள். இது ஒரு விஷயமே இல்லை. இது ஒரு சகோதர முரண்பாடு. இதுவே நிரந்தரம் கிடையாது” என தெரிவித்துள்ளார். இதற்கு விசிக தொண்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடுமையான வார்த்தைகளால் பேசிவிட்டு இப்போது சகோதர பாசம் என சொல்வது என்ன மாதிரியான நிலைப்பாடு என கேள்வியெழுப்பியுள்ளனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget