“கருத்தை மாற்றாதே; என்ன வருதோ பேசு” - திமுக மேடையில் கருணாநிதியை போல மிமிக்ரி செய்த நாசர்!
"நம் பிரச்சனையை கொண்டு சேர்ப்பதற்கு முன்னதாகவே, என்ன பிரச்சனை என்பதை அவர் அறிந்திருப்பார்"
சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்ற தி.மு.க கூட்டத்தில் கலந்துக்கொண்ட நடிகர் சங்க தலைவர் நாசர் , முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் ஸ்டாலின் ஆட்சி குறித்தும் தனது அனுபவங்களை மேடையில் பகிர்ந்துக்கொண்டார்.
நாசர் பேசியதாவது :
”நான் பாசக்கிளி படத்தில் நடிக்கும் பொழுது கலைஞரின் எழுத்தில் அப்படியே பேச வேண்டும் என்பது இயல்பு. ஆனால் எல்லோருக்கும் அது வராது. அவருடைய எழுத்தில் தாளம் இருக்கும். தமிழ் தெரிந்தவர்கள்தான் கையாள முடியும். அதை வசனமா பேச எனக்கு கடினமாக இருந்தது. அருண்குமார் என்னும் துணை இயக்குநர் ஒருவட் இருந்தார். அவர் கலைஞருக்காக எதுவும் செய்யக்கூடியவர். அவர் என்னிடம் பேசிதான் ஆக வேண்டும் என்றார். அப்பா பேசும் பொழுது ஒரு சொல் , இரு சொல் மாற்றிக்கொள்ளலாமா அப்படினு கருணாநிதியிடம் கேட்டேன்.. அதற்கு கலைஞர் (கலைஞரை போல் மிமிக்கிரி செய்து பேசுகிறார் நாசர்) யார் சொன்னது... கருத்து மாறாம உன்னால் என்ன பேச முடியுதோ அதுதான் வசனம் . அருண் குமார் சொன்னானா...நீ பேசு... கருத்து மட்டும் மாற்றாதே அப்படினு சொன்னார். 84 வரை நான் சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்தில் பராசக்தி வசனம் பேசிதான் சினிமாவில் வாய்ப்பு கேட்க முடியும். இன்று அந்த வசனம்தான் நடிகர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. நான்காம் முதல்வராக ஐயா மு.க. ஸ்டாலினை சந்தித்தேன். வெகு நாட்கள் கழித்து ஒரு நண்பனை பார்க்க வந்தது போல இருந்தது. அவரை சந்தித்த சூழல் நீங்கள் நீங்களாகவே இருங்கள்.. நான் நானாகவே இருக்கிறேன்... நான் உங்களின் ஒருவன், உங்களின் பிரதிநிதி என்பது போலத்தான் இருந்தது. எந்த சூழலிலும் மாணவர்களை சந்திப்பது, கூட்டத்தில் பங்கேற்பது வளர்ச்சியின் ஒரு பங்கு. எனக்கும் ஸ்டாலினுக்கும் நெருக்கமான உறவு இல்லை என்றாலும் அவர் பொது நிகழ்ச்சிகளில் பகிரும் புன்னகை அவ்வளவு இனிமையாக இருக்கும். எனக்கும் திமுகவிற்கும் கலை ரீதியிலான ஒரு உறவு உண்டு. எனது தந்தை காங்கிரஸ்காரராக இருந்திருந்தாலும் கூட, தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக , நான் தமிழ் நன்றாக பேச வேண்டும் என்பதற்காக முரசொலி வாங்கிக்கொண்டு வந்து, உடன்பிறப்பே என ஆரமிக்கும் அந்த பக்கத்தை உரக்க படிக்க சொல்வார். ஸ்டாலினை பொருத்தவரையில் தலைவனுக்கும் தொண்டனுக்கும் இடையில் ஒரு பெரிய கட்சுவரை எழுப்பிவிட்டேன். பார்ப்பதே அறிது. நான்தான் பெரியவன் என்பதல்லாம் கிடையாது. அவர் உங்களில் ஒருவன். நம் பிரச்சனையை கொண்டு சேர்ப்பதற்கு முன்னதாகவே என்ன பிரச்சனை என்பதை அவர் அறிந்திருப்பார். உங்களில் ஒருவனாக ஸ்டாலினை வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.