மேலும் அறிய

சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்: மீனவ மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் மெய்யநாதன்

குழாயை நிரந்தரமாக அகற்றுவது குறித்து வருகின்ற 16 ஆம் தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட உள்ளது.

நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். வருகின்ற 16 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் எனவும் மீனவ மக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் உறுதி அளித்தார்.

நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பாக பதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 2 ஆம் தேதி இரவு உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்த காரணத்தால் அப்பகுதி மீனவர்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாகி 5 நாட்கள் கடலுக்கு செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து 3, 4 , 5 ஆகிய தேதிகளில் மூன்றுமுறை குழாய் உடைப்பை சரி செய்ததாக  சிபிசிஎல் நிர்வாகம் அறிவித்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் எண்ணெய் உள்ளிட்ட எந்தவித எரிவாயுக்களையும் குழாயில் கொண்டு செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதால் நாகூர் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு தொழிலுக்கு சென்றனர்.


சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்: மீனவ மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் மெய்யநாதன்

இதனிடையே குழாயில் கச்சா எண்ணெய் செலுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில், நேற்றைய முன்தினம் 10 ஆம் தேதி  பம்பிங் செய்ததால் வானுயரத்தில் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடித்து கடலில் கலந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் கடற்கரையில் மீண்டும் திரண்டனர். சரி செய்யப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டதால் கச்சா எண்ணெய் துர்நாற்றம் வீசியதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். பம்பிங் செய்வது நிறுத்தப்பட்டதால் எண்ணெய் கசிவு குறைந்தது. இந்த சூழலில் நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதிப்புகள் மற்றும் குறைகள் குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கூறுகையில், “நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. சிபிசிஎல் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து தமிழக முதல்வரின் கண்காணிப்பில் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. குழாயை நிரந்தரமாக அகற்றுவது குறித்து வருகின்ற 16 ஆம் தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட உள்ளது.  எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவே மீனவ மக்கள் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம்.. வந்தது புதிய விதி!
திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம்.. வந்தது புதிய விதி!
Kanchipuram New Bus Stand: காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம்: விலகியது தடை! விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!
காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம்: விலகியது தடை! விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
Embed widget