மேலும் அறிய
சமூக நீதி போராட்டத்திற்கான தேவை அதிகரித்துள்ளது ! ராமதாஸ் போராட்ட களத்திற்கு வர வேண்டும் - விசிக எம்பி ரவிக்குமார் அழைப்பு
சமூக நீதி போராட்டத்திற்கான தேவை அதிகரித்துள்ளது ! மருத்துவர் ராமதாஸிற்கு கோரிக்கை வைத்த விசிக எம்பி ரவிக்குமார்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் - விசிக எம்பி ரவிக்குமார்
Source : ABP NADU
விழுப்புரம்: ஆங்கிலம் தொடர்பான அமித்ஷாவின் கருத்து ஏற்கத்தக்கது அல்ல, அது கண்டனத்திற்கு உரியது என்றும் திருமாவளவன் குறித்த மருத்துவர் ராமதாஸின் கருத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம், இரயில் பயணிகள் சங்கம் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்கும் விதமாக ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார்.
தொடர்ந்து, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்.,
ஆங்கிலம் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. அறிவு வளம் உள்ள ஒரு மொழி. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த மொழியாக ஆங்கிலம் உள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஆங்கிலம் பயிலப்படுகிறது அதனை முற்றாக தவிர்த்து விட்டால் அதன் மூலமாக வரும் அறிவி செல்வங்கள் இழக்க வேண்டிய நிலை வரும். எனவே அமித்ஷாவின் இந்த கருத்து ஏற்கத்தக்கது அல்ல. அமித்ஷாவின் மகன் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளார். கிரிக்கெட் விளையாட்டு ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு தான் அமித்ஷாவுக்கு உண்மையிலேயே ஆங்கிலத்திற்கும், ஆங்கில பண்பாட்டுக்கும் எதிராக இருந்தால் தன்னுடைய மகனை அப்பொறுப்பிலிருந்து விலகச் சொல்ல வேண்டும்.
இன்றைக்கு ஏழை, எளிய மக்கள் முதல் தலைமுறையாக கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை தடுப்பதற்கான ஒரு சதித்திட்டமாகவே இந்த கருத்து இருக்கிறது. ஆங்கிலம் வழியாக படித்தவர்கள் தான் உலக அளவில் தகவல் தொழில்நுட்பத்தில் துறையில் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். ஆங்கிலம் இல்லை என்றால் இஸ்ரோ விஞ்ஞானிகளால் எவ்வளவு பெரிய சாதனை செய்திருக்க முடியுமா. பட்டியல் சமூக மக்கள், பழங்குடி மக்கள் கல்வி பெறுவது வாழ்க்கையில் உயர்வதை தடுப்பதை ஒரு சதித்திட்டமாகவே அமிதாவின் கூற்று உள்ளது. இது கண்டனத்திற்கு உரியது இது அமிதாவின் கூற்று மட்டுமல்ல அவரை பின்னால் இந்த இயக்கம் ஆர்எஸ்எஸ்-ன் கூற்று. அமித்ஷாவின் கருத்து குறித்து ஆர்.எஸ்.எஸ் தெளிவுபடுத்த வேண்டும்
நாடாளுமன்ற தொகுதிகளை மறுவாரையரை செய்யவே 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தான் இந்திய அளவில் ஒரு முக்கிய பிரச்சினையாக முன்வைத்து வருகிறார் எல்லோருக்கும் எச்சரிக்கையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார் இது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக மாறும் தென்னிந்த மாநிலங்கள் முழுவதையும் வஞ்சித்து வட இந்திய மாநிலங்களில் சில மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவு இருந்தாலே ஆட்சி கைப்பற்றி விடலாம் என்கிற ஒரு திட்டமாகவே இந்த தொகுதி மறுமுறையை திட்டமிட்டுள்ளனர். இது ஒட்டுமொத்தமாக இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரிய சவாலாகவும், ஊறுவிளைப்பாகவும் மாறும்.
கீழடி தொடர்பான அறிக்கை ஒன்றிய அரசு வெளியிடாமல் வைத்திருப்பது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் இன்றைக்கு அந்த ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் பண்பாட்டு தொன்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பது தான் அடிப்படை என காரணம் தமிழ்நாட்டை இந்தியாவின் பகுதியாக அவர்கள் பார்க்க மறுக்கிறார்கள் இந்தியாவின் ஒருமைப்பாட்டை குறித்து அதிகம் பேசுபவர்கள் தான் தமிழ்நாட்டை இந்தியாவிற்கு அப்பால் வைத்து பார்க்கிறார்கள் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கிறார்கள் இந்த போக்கு ஏற்கக் கூடியது அல்ல.
நமது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தலைவர், தமிழ்நாட்டின மூத்த அரசியல்வாதியுமான பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் திருமாவளவன் அவர்களைப் பற்றி உயர்ந்த நல்லெண்ணத்தோடு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர் ராமதாஸ் எந்த நோக்கத்திற்காக இந்த கட்சியை துவக்கினாரோ. சமூக நீதி கொள்கையின் மீது மிகுந்த ஈடுபாடுடனும், உறுதியோடும் இருந்தார். அதே போன்ற ஒரு தேவை இன்றைக்கு அதிகரித்துள்ளது. 1989ல் இருந்தது விட இன்றைக்கு சமூக நீதி போராட்டத்திற்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அந்தப் போராட்ட களத்திற்கு வர வேண்டும். தமிழ்நாட்டை பிற்போக்கு சக்திகளின் வேட்டைக்காரராக மாற துணைப் போய்விடக் கூடாது என்ற வேண்டுகோளை வைக்கிறேன். நிச்சயமாக மருத்துவர் ராமதாஸ் முன்வந்தால் இந்த பகுதியில் சமூக முரண்பாடுகள் தீரும். நல்லிணக்கம் ஏற்படும். ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி ஏற்படுவதற்கு உறுதுணையாக இருக்கும் எனவே இந்த வேண்டுகோளை மருத்துவர் ராமதாஸ் பரிலீசிக்க வேண்டுமென உங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















